சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா.
இந்த திட்டத்துக்கான மொத்த மதிப்பீடு ரூ.3,770 கோடி ஆகும் விழாவில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மெட்ரோ ரயில் சிறப்பு மலரையும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். விழாவில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு:- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் விரிவாக்க பணி மேற்கொள்வதால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்திற்காக இதுவரை மத்திய அரசு 10 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.
விழாவில் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு இறுதிக்குள் கோயம்பேடு முதல் எழும்பூர் வரை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்