சென்னையில் நாளை முதல் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியதாவது.,
தமிழகத்தில் கொரோனா பரவல் (CoronaVirus) குறைந்துள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயில் (Chennai Metro Rail) சேவைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் வார நாட்களில் (அதாவது திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 5.30 முதல் தொடங்கி இரவு 11 மணி வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கூட்டமாக இருக்கும் நேரங்களில் அதாவது காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் பத்து நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயங்கப்படும்.
ALSO READ | கோடம்பாக்கம் - பூந்தமல்லி மெட்ரோ சேவை 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் - PTR
மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ இரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசுலிக்கப்படுகிறது. 21.06.2021 முதல் 21.08.2021 வரை முகக்கவசத்தை அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்ததற்காக 176 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.35200 வசுலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ இரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | Chennai Metro முக்கிய செய்தி: இந்த நாட்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR