பிளாஸ்டிக் இல்லா எதிர்காலம்... முன்னுதாரணமாக திகழ்ந்த மூத்த குடிமக்கள் - சென்னையில் கோலாகலம்!

Walk For Plastic: பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலத்திற்கு அனைவரும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக 200க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் சென்னையில் மேற்கொண்ட நடைபயணம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 19, 2024, 09:02 PM IST
  • இந்த நடைபயணம் அண்ணாநகர் டவர் பூங்காவில் தொடங்கியது.
  • 2 கி.மீ., தூரத்திற்கு இந்த நடைபயணம் நடைபெற்றது.
  • கடந்த ஆக. 17ஆம் தேதி அன்று இந்த நடைபயணம் நடைபெற்றது.
பிளாஸ்டிக் இல்லா எதிர்காலம்... முன்னுதாரணமாக திகழ்ந்த மூத்த குடிமக்கள் - சென்னையில் கோலாகலம்! title=

Senior Citizens Walk For Plastic: The Idea Factory மற்றும் Earth+Air ஆகிய அமைப்புகளின் 'என் சென்னை யங் சென்னை' முன்னெடுப்பின் "பிளாஸ்டிக்கிற்கான நடைபயணம்" (Walk For Plastic) என்ற நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பங்கேற்றனர். இதன்மூலம், எதற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை இவர்கள் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். 

இந்த நிகழ்வில் பங்கேற்ற மூத்த குடிமக்கள் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, எதிர்கால சந்ததியினருக்கு தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர். இந்த பிளாஸ்டிக்கிற்கான நடைபயணம் (Walk For Plastic) மூன்றாவது ஆண்டாக நடைபெறுகிறது. 

உற்சாகத்துடன் பங்கேற்ற மூத்த குடிமக்கள்

கடந்த சனிக்கிழமை (ஆக. 17) நடைபெற்ற இந்த நடைபயணம் சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் இருந்து தொடங்கியது. சுமார் 2 கி.மீ., வரை இந்த நடைபயணம் நடந்தது. சமூக உணர்வையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வையும் ஒன்றிணைத்து மனதை கவரும் வகையில் இந்த நடைபயணம் நடந்தது. பங்கேற்பாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன், மனித விழுமியங்கள் மீது கொண்ட அசைக்கமுடியாத நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.

மூத்த குடிமக்கள், தங்களின் இத்தனை வருட வாழ்க்கையின் மூலம் பெற்ற ஞானம் மற்றும் அனுபவத்துடன், எதிர்காலத்தில் சிறந்த உலகினை வடிவமைப்பதில் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை பிளாஸ்டிக்கிற்கான நடைபயணம் என்ற இந்த முன்னெடுப்பு அழகாக எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது. இத்தகைய நிகழ்வுகளில் மூத்த குடிமக்கள் பங்கேற்பது என்பது, ஒவ்வொரு தனிநபரும் வயது வித்தியாசமின்றி, நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பொட்டில் அறைந்தார் போல் ஒரு நினைவூட்டி உள்ளனர். 

மேலும் படிக்க | 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஊக்கப்படுத்திய விருந்தினர்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய இந்த விழிப்புணர்வை மேலும் விரிவுபடுத்தும் வகையில் பல விருந்தினர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர். ரோட்டரி மாவட்டம் 3233இன் 2024-25 மாவட்ட ஆளுநர் மஹாவீர் போத்ரா சிறப்பு விருந்தினராகவும், சௌபாக்யாவின் தலைமை செயல் அதிகாரியும் இயக்குநருமான வி.வரதராஜன் மற்றும் அதுல்யா சீனியர் கேர் சந்தைப்படுத்தல் இயக்குனர் ஜெ.கிருஷ்ண காவ்யா ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் பங்கேற்று தங்களின் ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கினர். பங்கேற்பாளர்கள், நமது நகரத்தை பாதுகாப்பதில் கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை நிகழ்வின் பங்கேற்பார்கள் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தனர். 

எதிர்காலத்திற்கான முன்னெடுப்பு

அதுல்யா சீனியர் கேர் வழங்கும் "பிளாஸ்டிக்கிற்கான நடைபயணம்" நிகழ்வு, டைட்டில் ஸ்பான்சர் காசாகிராண்ட் உட்பட பல அமைப்புகளால் ஆதரவு அளிக்கப்பட்டது. பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான கூட்டு முயற்சிக்கு இது ஒரு முக்கிய சான்றாகும். இது நம்பிக்கை அளிக்கும் ஒன்றும் செயல்படுகிறது, பிளாஸ்டிக் இல்லாத மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான முன்னெடுப்பில் கூட்டாக செயல்பட மற்றவர்களை இது ஊக்குவிக்கிறது.

மூத்த குடிமக்களின் அபரிமிதமான ஆர்வம், நமது பூமியைப் பாதுகாக்கும் விருப்பம் தலைமுறைகளைத் தாண்டியது என்ற தெளிவான செய்தியை நமக்குச் சொல்கிறது. சுற்றுச்சூழல் காக்கும் பொறுப்பில், மனிதர்களும் இயற்கையும் செழிக்கக்கூடிய உலகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைக்கான அழைப்பு இந்த முன்னடுப்பு...

மேலும் படிக்க | கலைஞர் முகம் பொறித்த 100 ரூபாய் நாணயம்! எங்கு எப்படி வாங்குவது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News