சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி VK.தஹில்ரமாணி ராஜினாமா ஏற்பு!
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த மாதம் 28-ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் முடிவு செய்தது.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, கொலீஜியத்திற்கு தஹில் ரமானி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை கொலீஜியம் ஏற்பாத நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசுத் தலைவருக்கு கடந்த 6ந் தேதி அவர் கடிதம் அனுப்பினார்.
அதைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களாக அவர் நீதிமன்ற விசாரணைகளில் பங்கெடுக்கவில்லை. இந்நிலையில், தஹில் ரமானியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது குறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே திரிபுரா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீதிபதி குரேஷியின் பெயரை கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது.