வரும் லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். காங்கிரஸ் கட்சியை தவிர, திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், திமுக மாவட்ட செயலாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். அப்போது மாவட்ட செயலாளர்களுக்கு அவர் கண்டிப்பான கட்டளைகளை பிறப்பித்துள்ளார். அதாவது, எந்த தொகுதியிலும் வாக்குகள் குறையக்கூடாது என தெரிவித்திருக்கும் அவர், ஒன்றியம், ஊராட்சிவாரியாக வாக்குகள் சதவீதம் பார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவில், "திமுகவுடன் கூட்டணி கட்சியினர் தோளோடு தோளாக நீண்டகாலமா கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள். அதனால் நட்புணர்வோடு கலந்து தொகுதிப் பங்கீடு செய்திருக்கிறோம். சில தொகுதிகளைப் பெற்று சில தொகுதிகளை விட்டுக் கொடுத்திருக்கிறோம். பலம் வாய்ந்த பெரிய கூட்டணியில் இது இயல்பானது. தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம்; தமிழ்நாட்டோட நலன் முக்கியம், நாட்டோட எதிர்காலம்தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.
"மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் அவரவர் மாவட்டங்களைச் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குகளைக் கூடுதலாக பெற்று தரும் பொறுப்பு சாரும். ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் அதற்கு அந்த மாவட்டச் செயலாளரும், பொறுப்பு அமைச்சரும்தான் பொறுப்பு. தொகுதி மட்டுமில்லாமல் தேர்தலுக்குப் பிறகு, ஒன்றிய – நகரம் - பகுதி- பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன். எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை இப்பவே சொல்லி விடுறேன். இதை ரொம்ப கண்டிப்போடவும் சொல்லுறேன்.
எல்லா தொகுதியிலயும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும். தோழமைக் கட்சிகளையும் இணைத்து தேர்தல் பணிக்குழுக்களை அமைக்க வேண்டும். போஸ்டர்கள், துண்டறிக்கைகளில் அனைத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் படங்களுக்கும் கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும். வேட்பாளர் யாராக இருந்தாலும் அரவணைத்து மக்களிடம் அழைத்துச் செல்லுங்கள். வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பதுதான் ரொம்ப முக்கியம். மக்களை நேரடியா சந்திக்க வேண்டும்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால்தான், தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவர முடியும். இந்தியா கூட்டணி பெறப்போகும் வெற்றி சமூகநீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான கருத்தியல்களளை தமிழ்நாட்டில் விதைக்கலாம் என்ற எண்ணமே, இனிமே பாசிச வெறிபிடித்த பா.ஜ.க.வுக்கு கனவிலேயும் வரக்கூடாது. அப்படிப்பட்ட மாபெரும் வெற்றியை நாம் பெற வேண்டும். புதுவை உட்பட 40 தொகுதிகள்லயும் நாம தான் வெற்றி பெற போகிறோம் என்பது உறுதி. ஜூன் 4-ஆம் தேதி வெற்றிச் செய்தியோட வந்து என்னைச் சந்தியுங்கள்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ