‘தகுதிவாய்ந்த’ மீம் வீடியோவால் சவுக்கு சங்கர் - பிடிஆர் இடையே மோதல்! ட்விட்டரில் நடப்பது என்ன?

PTR Vs Savukku Shankar: யூடியூபர் சவுக்கு சங்கர் அட்மின் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிடிஆர் ட்வீட் செய்திருப்பது வைரலாகி வருகிறது. 

Written by - Bhuvaneshwari P S | Edited by - Shiva Murugesan | Last Updated : Mar 22, 2023, 01:00 PM IST
  • கவுண்டமணி, செந்தில் காமெடியை வைத்து வீடியோ மீம் ஒன்று வெளியானது.
  • தன்னை யாரும் விமர்சிக்க கூடாது என அவர் நினைக்கிறாரா? சவுக்கு சங்கர்
  • என்னை தொந்தரவு செய்யத் தொடங்கினால் அரசியலில் இருந்து விலகிவிடுவேன் -நிதியமைச்சர் பிடிஆர்.
‘தகுதிவாய்ந்த’ மீம் வீடியோவால் சவுக்கு சங்கர் - பிடிஆர் இடையே மோதல்! ட்விட்டரில் நடப்பது என்ன? title=

சமூக வலைதள பிரபலமான சவுக்கு சங்கர் தொடர்ந்து ஆளும் கட்சியை விமர்சித்து ட்வீட்டுகளை போட்டு வருகிறார். அதோடு பல்வேறு யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார். இவரது பேட்டிகள் எப்போதுமே பல லட்சம் வியூஸ்களை பெறும். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு தமிழக பட்ஜெட் தாக்கலின் போது தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து பலரும் தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகள் யார் என கேள்வி எழுப்பி வந்தனர். அதோடு இதுகுறித்த மீம்ஸ்களும் வைரலானது. 

இந்த சூழலில் சவுக்கு சங்கரின் அட்மின் வாய்ஸ் ஆஃப் சவுக்கு என்ற ட்விட்டர் பக்கத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடியை வைத்து வீடியோ மீம் ஒன்று வெளியானது. அதனுடன் இப்படித் தான் மு.க.ஸ்டாலின் மற்றும் பிடிஆர் தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளை தேர்ந்தெடுப்பார்கள் என எழுதப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பிப்பது எப்படி... யாருக்கு கிடையாது- முழு விவரம்

இந்த மீம் உடனே மிகப்பெரிய அளவில் வைரலானதோடு, அதிகளவில் ரீ-ட்வீட்டும் செய்யப்பட்டது. இதனையடுத்து புகாரின் பேரில் சவுக்கு சங்கரின் அட்மின் பிரதீப் இரவு 11.30 மணி அளவில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள சவுக்கு சங்கர், பிடிஆர் அழுத்தம் காரணமாக தமிழக போலீஸ் எனது அட்மினை கைது செய்துள்ளனர். தன்னை யாரும் விமர்சிக்க கூடாது என அவர் நினைக்கிறாரா என எழுதி பிடிஆரை டேக் செய்திருந்தார்.

இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்துள்ள அமைச்சர் பிடிஆர், "இந்த கற்பனைவாதியின் சித்தப்பிரமையை நான் கண்டுகொள்ள மாட்டேன். ஆனால் இது 100 சதவீதம் பைத்தியக்காரத்தனம் என்பதால் பதிலளிக்கிறேன். இந்த அட்மின் இருப்பது எனக்குத் தெரியாது. அதனால் அந்த மீம் வீடியோவை நான் பார்க்கவில்லை, புகாரும் அளிக்கவில்லை. இடைநீக்கம் செய்யப்பட்ட DVAC Clerk தமிழக பட்ஜெட் குறித்து விமர்சிப்பது என்னை தொந்தரவு செய்யத் தொடங்கினால் அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என எழுதியுள்ளார். 

தற்போது இந்த விவகாரம் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க: எம்.எம்.அப்துல்லா Vs சவுக்கு சங்கர்..! ட்விட்டரில் நடந்த வார்த்தைப் போர்! முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News