நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி

Last Updated : Feb 18, 2017, 05:32 PM IST
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி title=

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி

எதிர்க்கட்சி இல்லாமல் ஓட்டெடுப்பு

122 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு- அரசு தப்பியது  

கவர்னர் வித்யாசாகர் மும்பை பயணம் ரத்து

சட்டசபை 3 மணி வரை ஒத்திவைப்பு

சட்டசபை மீண்டும் ஒத்திவைப்பு 

திமுக எம்.எல்.ஏக்களை குண்டுகட்டாக வெளியேற்ற காவலர்கள் முயற்சி

சபாநாயகர் மைக் மீண்டும் உடைப்பு

ரகசிய ஓட்டெடுப்பு வேண்டும்: எம்.எல்.ஏ.,க்கள் கோஷம்

சட்டசபை வளாகத்திற்கு ஆம்புலன்ஸ் வருகை

சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக வெளியேற்றம் 

விதிகளின்படி சபையை நடத்த கடமைப்பட்டுள்ளேன்: சபாநாயகர்

சட்டசபை மீண்டும் கூடியது

சட்டப்சபை கூட்டம் மதியம் 1 மணி வரை ஒத்திவைப்பு

சபாநாயகர் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டது

சட்டசபையில் சபாநாயகர் மைக் உடைக்கப்பட்டது

எதிர்க்கட்சியினருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் சபாநாயகரை முற்றுகையிட்டனர்

சபாநாயகர் இருக்கையை அடித்து உடைத்தனர் திமுக எம்எல்ஏக்கள்

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை

வேறு நாளில் ஓட்டெடுப்பு: ஸ்டாலின் கோரிக்கை நிராகரிப்பு 

எம்எல்ஏக்கள் தொகுதிகளுக்கு போய் மக்களை சந்தித்த பின் வாக்கெடுப்பு நடத்தலாம்- ஓபிஎஸ்

மக்களின் குரலை எம்எல்ஏக்கள் கேட்ட பின்னரே வாக்கெடுப்பு நடத்த வேண்டும்- ஓபிஎஸ் 

மக்களின் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும்- ஓபிஎஸ் 

கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைக்க வைக்கப்பட்டிருந்ததை மக்கள் அறிவர்- ஓபிஎஸ் 

சட்டசபை காங். குழு தலைவர் ராமசாமி பேசிவருகிறார் 

சட்டசபைக்கு 230 எம்எல்ஏக்கள் வந்துள்ளனர்

இப்போது எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார்

230 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பு

எம்.எல்.ஏக்கள் முழக்கம் கதவுகள் மூடப்பட்டாலும் பெரும் அமளி தொடர்கிறது திமுக, ஓபிஎஸ், காங் 

சட்டசபையில் வாக்கெடுப்பு தொடங்கியது 

சட்டசபையில் அனைத்து வாயில்கள் அடைக்கப்பட்டன

எம்எல்ஏக்களுக்கு போதிய, உரிய பாதுகப்பு வழக்கப்படும்- சபாநாயகர் 

ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் மறுப்பு

அதிமுகவின் இரு அணி எம்.எல்.ஏக்களும் முழக்கம் செம்மலை முதலில் பேச அனுமதிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலினும் கோரிக்கை 

ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின் தரப்புக்கு சசி தரப்பு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு 

இரு தரப்பினருக்கும் இடையே பெரும் அமளி 

நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் எடப்பாடி பழனிச்சாமி 

எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வேண்டும்- சுதந்திரமாக வாக்களிக்க அனுமதி வேண்டும் என அமளி 

செம்மலை பேசுவதற்கு முதலில் அனுமதி கோரி ஓபிஎஸ் அணி கோரிக்கை

29 ஆண்டுகளுக்குப் பின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது 

சபாநாயகர் தலைமையில் சட்டசபை கூட்டம் தொடங்கியது 

சட்டசபையில் 6 பிரிவான இருக்கைகளில் எம்.எல்.ஏ.,க்கள் அமரவைப்பு 

4வது பிரிவில் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், திமுக எம்.எல்.ஏ.,க்கள் அமரவைப்பு 

சட்டசபையில் 6 பிரிவாக ஓட்டெடுப்பு நடக்கவுள்ளது

அதிமுக கொறடாவாக செம்மலை நியமனம்: மதுசூதனன் 

சட்டசபைக்கு கிளம்பினார் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபைக்கு புறப்பட்டார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

இன்னும் 30 நிமிடத்தில் சட்டசபை கூடும்

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக வந்து சேர்ந்தனர்

 

 

சசிகலா குடும்பத்தை கட்சியில் நுழைத்தது தவறு- கோவை எம்எல்ஏ அருண்குமார் 

மக்களின் எண்ணப்படியே வாக்களிக்க பிடிக்காமல் ஊருக்கு திரும்பினேன்- அருண்குமார் 

கூவத்தூரிலிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்தனர்

ஸ்டாலின் வாகனத்தை சோதனையிட்ட போலீசார்- திமுக எம்எல்ஏக்கள் கண்டன குரல் சட்டசபைக்குள் கண்டன முழக்கத்தோடு நுழையும் திமுக எம்எல்ஏக்கள்

 

 

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்தனர் 

திமுக எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு வர ஆரம்பித்தனர்

 

 

தலைமைச் செயலகம் வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 

இன்று சட்டசபையில் நடக்கப் போகும் நம்பிக்கை ஓட்டெடுப்பு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே ஆதரவாக இருக்கும் என மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

 

135 எம்.எல்.ஏக்களும் ஆதரவளிப்பர் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

 

கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட் விட்டு அதிமுக கட்சி எம்.எல்.ஏ.க்கள், சட்டசபையில் கலந்து கொள்ள சென்றுகொண்டு இருகிராகள்.

 

 

சட்டசபையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டசபையின் 10 வாசல்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை வளாகத்திற்குள் செல்ல செய்தியாளர்களின் வாகனங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளன. எம்.எல்.ஏ.,க்களின் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே சட்டசபைக்குள் அனுமதிக்கப்பட உள்ளன.

 

 

வாயலூர் தனியார் சிறுவர் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களை கூவத்தூர் அழைத்து வந்து எடப்பாடி பழனிச்சாமி வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்ற தட்டிகளை அவர்கள் கையில் கொடுத்திருக்கிறார் தனியார் விடுதியின் நிர்வாகி.

 

காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் இப்போதே வருகை 

Trending News