உதகை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று குன்னூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவினை துவங்கிவைத்தார்!
100 ஆண்டு கால பழமைவாய்ந்த குன்னூர் முத்தாலம்மன் கோவில் வழக்கமாக 12 வருடத்திற்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கும்பாபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கும்ப கரகத்தில் புனித நீரினை வழங்க அதனை அர்சகர் பெற்று கரகத்தில் ஊற்றி இந்த விழாவினை துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வருடன் அமைச்சர்கள் செவ்வூர் ராமசந்திரன், எஸ் பி வேலுமணி, மாவட்ட ஆட்சியர் திவ்யா ஆகியோரும் கலந்துக்கொண்டனர்!