எம்ஜிஆர் படம் வந்தால் போதும்... நினைவுகள் பகிர்ந்த மு.க. ஸ்டாலின்

எம்ஜிஆர் படம் வந்தால் போதும் முதல் ஆளாக சென்றுவிடுவேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 30, 2022, 08:48 PM IST
  • ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு தொடக்க விழா
  • திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
  • எம்ஜிஆருடனான நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார்
எம்ஜிஆர் படம் வந்தால் போதும்... நினைவுகள் பகிர்ந்த மு.க. ஸ்டாலின் title=

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில், திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமைக்கு உரியவர் ஜானகி எம்.ஜி.ஆர். ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு துவக்கவிழா நடத்துவது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். மாணவராக இருந்தபோது பள்ளி நிதி பெறுவதற்காக எம்.ஜி.ஆரை சந்திக்க சத்யா ஸ்டுடியோவுக்கு வந்தேன். எம்.ஜி.ஆர் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நன்றாக படிக்க வேண்டும் என்று என்னிடம் உரிமையுடன் கூறுவார். 

எம்.ஜி.ஆர் நடித்த படம் வெளியாகும்போது முதல் நபராக நான் படத்திற்கு செல்வேன். எம்.ஜி.ஆரும் என்னை தொலைபேசியில் அழைத்து திரைப்படம் எப்படி இருந்தது என கேட்பார். மருதநாட்டு இளவரசி படத்தில் 3 முதலமைச்சர்களின் பங்களிப்பு இருந்தது. தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளை நன்கு அறிந்தவர் ஜானகி அம்மையார். தனிக்கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினாலும் அண்ணாவின் கொள்கையாளராகவே இருந்தார். 

எம்.ஜி.ஆரின் பங்களிப்பு திமுகவில்தான் அதிகம். அதிமுகவைவிட, திமுகவில் தான் எம்ஜிஆரின் பங்களிப்பு அதிகம். எம்ஜிஆர் திமுகவில் அதிக காலம் இருந்தவர். தேசிய இயக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆரை, திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரிக்கு அனுமதி வழங்கியது கருணாநிதிதான்.

மேலும் படிக்க | நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த முன்னாள் முதல்வர் 

டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி உருவாக துணையாக இருந்தவர் கருணாநிதி. செவிக்குறைபாடு, பேச்சுக்குறைபாடு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்; நிச்சயமாக இக்கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்றார்.

மேலும் படிக்க | ஜல்லிக்கட்டில் விதிமீறலும், கொடூரமும் இல்லை - உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

மேலும் படிக்க | டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை - முதலமைச்சர் அறிவிப்பு

மேலும் படிக்க | எகிறியடிக்க தொடங்கிய எடப்பாடி! திமுகவின் ரியாக்ஷன் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News