கோவையின் கொடை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் காலமானார்

‘கியர்மேன்’ என அழைக்கப்படும் சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் கோவையின் கொடை வள்ளலாக திகழ்ந்தார். கோவையில், ஏழை எளியோருக்கு உதவும் வகையில் ரூ.10க்கு மதிய சாப்பாடு, ரூ.5 க்கு டிபன்  வழங்கி, பெரும் சமூக சேவை செய்து வந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 11, 2020, 02:53 PM IST
  • ‘கியர்மேன்’ என அழைக்கப்படும் சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் கோவையின் கொடை வள்ளலாக திகழ்ந்தார்.
  • அவர் உடல் நலக்குறைவு காரணமாக சில காலங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
  • சேவை செய்தும் தனக்கென விளம்பரம் தேடிக் கொள்ளாத மிகச்சிறந்த மனிதர்.
கோவையின் கொடை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் காலமானார் title=

‘கியர்மேன்’ என அழைக்கப்படும் சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் கோவையின் கொடை வள்ளலாக திகழ்ந்தார். கோவையில், ஏழை எளியோருக்கு உதவும் வகையில் ரூ.10க்கு மதிய சாப்பாடு, ரூ.5 க்கு டிபன்  வழங்கி, பெரும் சமூக சேவை செய்து வந்தார்.

கோவை நகரின் அடையாளங்களில் ஒன்று சாந்தி கியர்ஸ் நிறுவனம். 1972 ஆம் ஆண்டு வாக்கில் சாந்தி இன்ஜீனியரிங் அண்டு டிரேடிங்க் கம்பெனி என்ற பெயரில்  சுப்ரமணியம் அவர்கள் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். பிறகு, 1986 ஆம் ஆண்டு சாந்தி கியர்ஸ் பிரைவேட் லிமிடெட்டாக மாற்றப்பட்டது. இந்தியாவில் கியர்கள் மற்றும் கியர் பாக்ஸ்கள் தயாரிக்கும் முக்கிய நிறுவனமாக உள்ளது.

கடந்த 1996 முதல், சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கினார். கோவை சிங்காநல்லூரில் இந்த அறக்கட்டளை நடத்தும், சாந்தி சோஷியல் சர்வீஸ் கேண்டீன் (Shanthi Social service canteen - SSS) என்னும் உணவகம் புகழ் பெற்றது. இங்கே 10 ரூபாய்க்கு மதிய சாப்பாடும், டிபன் வகைகள் 5 ரூபாய்க்கும் வழங்கப்பட்டன. இந்த உணவகம் சுகாதாரத்திற்கும் பெயர் பெற்றது.

இந்த நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் கட்டணம் ரூ.30 மட்டுமே. ஏழைகளுக்கு மிக குறைந்த விலையில், அதாவது 30 சதவிகிதம் குறைத்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பால் இலவச மின்மயானமும் இயங்கி வருகிறது.

கோவையின் (Coimbatore) கொடை வள்ளலாக திகழ்ந்த சுப்ரமணியம் நேற்று மரணமடைந்தார்.  அவர் உடல் நலக்குறைவு காரணமாக சில காலங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த சேவை செய்தும் தனக்கென விளம்பரம் தேடிக் கொள்ளாத மிகச்சிறந்த மனிதர்.

ALSO READ | சர்வதேச பாரதி விழாவில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News