நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி

2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. அதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 2, 2019, 01:55 PM IST
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி title=

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அடுத்து மத்தியில் யார் ஆட்சி அமைக்க போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வாசித்தார். பின்னர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி கூட்டாக இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஒரு வாக்குறுதி கூட பொய்யாக இருக்காது, அனைத்தும் நிறைவேற்றப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு நன்மை, பெண்களுக்கு பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் மிகவும் பாதிக்கபட்டு உள்ளனர். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என திமுக உட்பட அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பல போராட்டங்களையும் நடத்தினார்கள். ஆனால் தற்போது உள்ள மோடி தலைமையிலான மத்திய அரசு "நீட் தேர்வு" விலக்கு தமிழகத்திற்கு அளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இன்று வெளியிட்டப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதேபோல மற்ற மாநிலங்களுக்கும் நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்றால், அங்கும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்தல் நடத்தப்படும். எனக் கூறப்பட்டு உள்ளது. 

அதேபோல தமிழகத்தில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி இடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News