மதம் மாற்றம் செய்வதாக வந்த புகாரில் டெல்லி உயர்நீதிமன்றம் சில கருத்துக்களைக் கூறியுள்ளது. இந்தியாவில் மதம் மாற்றம் கட்டாயச சட்டம் இன்னும் சர்ச்சையில் இருக்கிறது. அச்சட்டம் தரும் சிக்கல்கள் குறித்து தொடர்ந்து விவாதமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் கொடுத்து மதம் மாற்றுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்ககோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | பட்டினப்பிரவேசமும் ஆதீனங்களின் குமுறலும்: மத்திய அரசிடம் செல்லுமா புகார் பட்டியல்
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா என்பவர் இந்த வழக்கைத் தொடுத்திருந்தார். இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் கூறிய கருத்துக்களை சுருக்கமாகப் பார்க்கலாம்.
1. இந்த புகார் மனுவுக்கான ஆதாரம் என்ன ?. சமூக ஊடகங்களில் வரும் தகவலை ஆதாரமாக கொண்டு கட்டாய மதமாற்ற வழக்கை விசாரிக்க முடியாது.
2. செய்தித்தாள், வாட்ஸ்அப், சமூக ஊடகங்களில் வரும் தகவல்களைக் கொண்டு பொதுநல மனுவைத் தாக்கல் செய்யக்கூடாது.
3. அரசுக்கு நோட்டீஸ் அனுப்புவதாக இருந்தால்கூட மனுவில் போதிய ஆதாரங்கள் இருக்க வேண்டும்
4. மதம் மாறுவது எந்த சட்டத்தின்படியும் தடை செய்யப்படவில்லை. முக்கியமான இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றால் போதிய ஆதாரம் வேண்டும்.
மேலும் படிக்க | இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு பத்து லட்சம் பேருக்கு அனுமதி: சவுதி அரேபியா
5. தனி நபர் ஒருவர் தான் விரும்பிய மதத்தை பின்பற்ற உரிமையுண்டு. அதேபோல், ஒருவர் விரும்பும் மதத்திற்கு மாறவும் அவருக்கு எந்தவித தடையும் இல்லாமல் வாழ அரசியல் சாசனத்தில் உரிமை உண்டு.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe