ராக்கெத்லான் போட்டியில் அண்ணன், தங்கை தங்க பதக்கம் வென்று சாதனை!

ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ராக்கெத்லான் சாம்பியன்ஷிப் போட்டியில்  கோவையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை தங்க பதக்கம் வென்று சாதனை.   

Written by - RK Spark | Last Updated : Sep 6, 2022, 09:11 AM IST
  • கோவையை சேர்ந்த அண்ணன், தங்கை சாதனை.
  • ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற ராக்கெத்லான் போட்டியில் தங்க பதக்கம்.
  • கோவை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு.
ராக்கெத்லான் போட்டியில் அண்ணன், தங்கை தங்க பதக்கம் வென்று சாதனை! title=

'டேபிள் டென்னிஸ், ஸ்குவாஸ், லான் டென்னிஸ் மற்றும் இறகுபந்து ஆகிய நான்கு விளையாட்டுகளையும் உள்ளடக்கிய ராக்கெத்லான்' சாம் பியன்ஷிப் – 2022 ஆண்டுக்கான போட்டி ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில், நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி சார்பாக கோவை சூலூர் பகுதியை சேர்ந்த எம்.டி.என்., பியூச்சர் பள்ளியில் பயிலும் ஒரே குடும்பத்தை  சேர்ந்த அண்ணன் ஆதித், தங்கை ஆதிரை ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்து, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றனர்.

இதே போல கோவையை சேர்ந்த ஆதர்ஷ் என்ற மாணவன் உட்பட, சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இப்போட்டியில், கோவை சூலூர் எம்.டி.என்.பள்ளி வீராங்கனை ஆதிரை 16 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார். இதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில், அதே பள்ளியில் பயிலும் இவரது அண்ணன் ஆதித், தங்கை ஆதிரையுடன் ஜோடியாக விளையாடி ஒரு தங்கம் மற்றும் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில், ஆதிரை மற்றும் ஆதர்ஷ் ஜோடி ஒரு தங்கம் என, தங்கப்பதக்கங்கள் வென்றனர்.

covai

மேலும் படிக்க | சேலம்; சில்மிஷ இயக்குநரை சிறையில் அடைத்த காவல்துறை; இளம் பெண்கள் சரமாரி புகார்

இந்திய அணி சார்பாக மொத்தம் ஒன்பது வீரர்கள் கலந்து கொண்டதில், தமிழகத்தை சேர்ந்த குறிப்பாக கோவையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை வென்ற நிலையில், கோவை விமான நிலையம் வந்த, ஆதித் மற்றும் ஆதிரை ஆகியோருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறுகையில், கடின பயிற்சி மற்றும் முயற்சியின் காரணமாக இந்த இலக்கை அடைய முடிந்ததாக தெரிவித்தனர். குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை வென்று சர்வதேச அளவில் கோவைக்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறினர்.

covai

மேலும் படிக்க | விஜய், அஜித்துக்கே இல்லை..ஆனா உதயநிதிக்கு கிடைத்த பெருமை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News