புதுடெல்லி: நாட்டில் ஒரே நாளில் 12,213 புதிய கோவிட் -19 தொற்று பாதிப்பு பதிவாகியதை அடுத்து, மொத்த கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,32,57,730 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், கோரோனவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 58,215 ஆக அதிகரித்துள்ளது.
வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11 பேர் தொற்றுநோயால் இறந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 5,24,803 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,73,54,809 ஆக அதிகரித்துள்ளது மற்றும் இதுவரை 63,14,405 பேர் இந்த தொற்றுநோயால் இறந்துள்ளனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு
நாட்டில் கோவிட்-19 சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 58,215 ஆக அதிகரித்துள்ளது, இது மொத்த தொற்று பாதிப்புகளில் 0.13 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,578 ஆக அதிகரித்துள்ளது. தொற்று இல்லாத தேசிய விகிதம் 98.65 சதவீதமாகும்.
அதே நேரத்தில், நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 195.67 கோடிக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் தொற்று காரணமாக 11 இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் 3, மகாராஷ்டிராவில் இரண்டு மற்றும் குஜராத், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.
நாட்டில் இதுவரை மொத்தம் 5,24,803 பேர் தொற்றுநோயால் இறந்துள்ளனர். அவர்களில் 1,47,877 பேர் மகாராஷ்டிராவிலும், 69,845 கேரளாவிலும், 40,109 கர்நாடகாவிலும், 38,026 தமிழ்நாட்டிலும், 26,223 டெல்லியிலும், 23,525 பேர் உத்தரபிரதேசத்திலும் மற்றும் மேற்கு வங்கத்தில் 21,207 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
இதுவரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேறு சில கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: COVID-19: வந்துவிட்டதா நான்காவது அலை? ஒரே நாளில் புதிதாக 7,584 பேர் பாதிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR