சிறுவர் பூங்காவில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு முகாம்!
கோயம்புத்தூர் சிறுவர் பூங்காவில் மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாநகர காவல்துறையினர் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர்.
தற்போது, சில பள்ளிகளுக்கு கோடைக்கால விடுமுறை இன்னும் முடியடையாத நிலையில், சிறுவர்கள் இன்னும் விடுமுறை நாட்களை கொண்டடி வருகின்றனர். இந்நிலையில், கோவை சிறுவர் பூங்கா ஒன்றில் மாணவர்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோடை முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த முகாமில், மாணவர்களுக்கு கல்வி, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், சிறுவர்களை கவரும் வண்ணம் பல ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
A summer camp was organised by City police in collaboration with Honda, to educate and create awareness among students about road safety & traffic rules, at Children's Traffic Park in Coimbatore #TamilNadu pic.twitter.com/qT4lpil5NT
— ANI (@ANI) June 17, 2018
இந்த முகாமை கோவை மாநகர காவல்துறையினர் மற்றும் ஹோண்டா நிறுவனமும் இணைந்து நடத்தியுள்ளது.