நெல்லை மாவட்டம் திருக்குருங்குடி கீழரத வீதி பகுதியை சேர்ந்தவர் பிரேமா. அதே பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். மாரியப்பன் தற்பொழுது டெல்லியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். பிரேமா மற்றும் மாரியப்பன் கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் இருவீட்டாரும் இவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மாரியப்பனுக்கு பிரம்மாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வந்தனர். மாரியப்பன் அசாமிலும் சென்னையிலும் வசித்து வந்த நிலையில் மாரியப்பன் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சேர்ந்த மற்றொரு பெண்ணை கடந்த 2021 ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதற்கு பின்னர் முதல் மனைவி பிரேமாவுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி அவருடன் பேசி வந்துள்ளார் இதனை அறிந்த அவரது இரண்டாவது மனைவி அவரைவிட்டு தனியாக பிரிந்து சென்று விட்டார்.
மேலும் படிக்க | சாதி, மத மோதல்களுக்கு சமூக வலைதளங்களே காரணம் - மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் மாரியப்பனின் முதல் மனைவி பிரேமா மாரியப்பனிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மனைவி பிரேமா மற்றும் மாரியப்பன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருநெல்வேலியிலிருந்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு இருசக்கர வாகனத்தில் குழந்தை நேத்ரா ஸ்ரீ உடன் திருக்குறுங்குடி நோக்கி வந்துள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வரும் போதே மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரேமாவின் கணவர் மாரியப்பன் திருக்குறுங்குடி பெரிய குளத்திற்குள் அழைத்துச் சென்று குழந்தை கண் முன்னே பிரேமாவை அடித்து கொலை செய்து மண்ணில் புதைத்து உள்ளார்.
பின்னர் நேற்று திருக்குறுங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரனிடம் நேரில் சென்று மனைவியை அடித்து கொலை செய்து குளத்தில் புதைத்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.உடனடியாக இது குறித்து திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் தகவல் தெரிவிக்கவே போலீசார் திருக்குறுங்குடி குளத்தில் புதைக்கப்பட்டிருந்த பிரேமாவின் உடலை தோண்டி எடுத்தனர் அவரது கணவர் ராணுவ வீரரான மாரியப்பனையும் போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே இருவரும் இருவீட்டின் சம்மதமில்லாமல் திருமணம் செய்துள்ளனர் இதனிடையே பிரேமா கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இவர்களது ஒன்றரை வயது குழந்தை நேத்ரா ஸ்ரீ ஆதரவற்று போனார்.குழந்தை நேத்ரா ஸ்ரீயை பிரேமாவின் பெற்றோர்களும் மாரியப்பனின் பெற்றோர்களும் பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் குழந்தையை காவலர்கள் திருக்குறுங்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரை திருக்குறுங்குடி அருகே உள்ள திருவரங்கநேரி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் தேவி என்பவர் தன் குழந்தை போல சாப்பாடு ஊட்டியும், உணவு மற்றும் துணி வாங்கி கொடுத்தும் குழந்தை எங்கு சென்றாலும் அங்கு சென்று தனது குழந்தை போல பார்த்துக்கொண்டார்.
அதேபோல் காவலர்களும் செல்லப் பிள்ளையாகவே பார்த்துக்கொண்டனர். ஒன்றும் அறியாத அந்த சிறு குழந்தை காவல் நிலையத்தை வீடு போல நினைத்து அங்கும் இங்குமாக ஓடி அனைவருக்கும் புன்னகையோடு டாட்டா காமிக்கவும் கொண்டிருந்தது. இருவீட்டாரும் இருவரிடமும் போலீசார் இந்த குழந்தையை ஏற்றுக் கொள்ளும்படி பலமுறை பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. மேலும் சிறுமியை காப்பகத்தில் சேர்ப்பதற்கு போலீசார் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆத்திரத்தில் கணவன் செய்த கொலையால் ஆதரவற்ற நிலையில் நிற்கும் குழந்தை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்போது அந்த குழந்தை நெல்லையில் உள்ள சரணாலயத்தில் ஒப்படைக்கபட்டது.
மேலும் படிக்க | திமுக தலைமை தொடர்ந்து டார்சர் செய்தால் "தற்கொலை" செய்துகொள்வேன் -எச்சரித்த நிர்வாகி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR