மதுரை மக்களின் தங்கரதை வைகை எக்ஸ்பிரஸ் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

1977ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வைகை எக்ஸ்பிரஸ் தனது பயணத்தை தொடங்கியது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 17, 2021, 09:42 PM IST
  • தினசரி இயங்கும் இந்த இரயில் முக்கியமான ஏழு நிலையங்களில் நின்று செல்கிறது.
  • வைகை எக்ஸ்பிரஸ் மணிக்கு 60 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது.
மதுரை மக்களின் தங்கரதை வைகை எக்ஸ்பிரஸ் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! title=

மதுரையில் இருந்து புறப்படும் போது 12636 என்ற எண்ணிலும் மற்றும் சென்னையில் இருந்து கிளம்பும் போது 12635 என்ற எண்ணிலும் செல்கிறது வைகை எக்ஸ்பிரஸ்.  மதுரைக்கும் சென்னைக்கும் இடையே செல்லும் இந்த இரயில் சூப்பர்ஃபாஸ்ட் வைகை எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுகிறது. மதுரையில் இருந்து சென்னைக்கு பயணிக்க மக்கள் மத்தியில் மிகவும் பிரசிதிபெற்ற மற்றும் எப்பொழுதும் பிசியாக இயங்க கூடியது இந்த வைகை.  முக்கிய இரயில் நிலையமான திருச்சிராப்பள்ளியை  கடந்து செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் இந்திய இரயில்வேயின் தெற்கு மண்டலமான தெற்கு ரயில்வேயால் இயக்கப்படுகிறது.

தினசரி இயங்கும் இந்த இரயில் முக்கியமான ஏழு நிலையங்களில் நின்று செல்கிறது. சென்னையில் தொடங்கி மதுரையில் நிற்கும் வைகை சராசரியாக 8 மணி நேரத்தில் 497 கிமீ தூரத்தை கடக்கிறது. பயணிகளின் வசதிக்காக, ரயில்வே துறை சிறந்த சீட்டிங் ஏற்பாட்டை வடிவமைத்துள்ளது. ஏசி, செகண்ட் சிட்டிங் மற்றும் முன்பதிவு செய்யப்படாத இருக்கைகள் என அனைத்தும் வைகையில் உள்ளது. பயணிகளின் வசதிக்காக, இந்த வகையான வசதிகளை செய்துள்ளது இந்திய ரயில்வே.

vaigai

வைகை எக்ஸ்பிரஸ் மணிக்கு 60 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. கேட்டரிங் வசதி மூலம் சிறந்த உணவுடன், பெட்டிகள் எப்பொழுதும் முற்றிலும் சுத்தமாக வைத்துக்கொள்ளப்படும். குறைந்த டிக்கெட் விலையில் மதுரையில் இருந்து சென்னை செல்ல உதவிகரமாக உள்ளது.  இந்த ரயில் காலை 7:00 மணிக்கு மதுரை சந்திப்பில் இருந்து சோழவந்தான், திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, அரியலூர், விருத்தாசலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம், மாம்பலம் இரயில் நிலையங்களை கடந்து மதியம் 2.40 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது.  இது தென்னிந்திய ரயில்வேயின் சிறந்த ரயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

vaigai

வைகை ரயில் இரண்டு தலைமுறைகளாக தனது சேவையை வழங்கி வருகிறது. 15 ஆகஸ்ட் 1977 அன்று முதன்முதலில் காலை 6 மணிக்கு மதுரையில் இருந்து 135 என்ற எண்ணுடன் புறப்பட்டது.  12635 என்ற என்னுடன் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1:40 மணிக்கு புறப்பட்டு மதுரையை 9:20 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் சரியான நேரத்தில் தனது இலக்கை அடைந்து நல்ல வேகத்தில் இருப்பதால் எப்போதும் கூட்டமாக இருக்கிறது.  வைகை ரயிலில் CC க்கு 665 கட்டணமும், 2S க்கு 180 மற்றும் GN க்கு 160 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தட்கல் ஒதுக்கீட்டில், கட்டணம் CC க்கு 835 ஆகவும், 2S க்கு 195 ஆகவும் இருக்கிறது.

ALSO READ அரசியல்வாதி ஆக பயிற்சி கொடுக்கும் ஜோதிமணி எம்பி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News