கரூரில் உருக்கமான கடிதம் எழுதி 12ம் வகுப்பு மாணவி தற்கொலை

கரூர் அருகே தனியார் பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கடிதம் சிக்கியுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 20, 2021, 11:49 AM IST
கரூரில் உருக்கமான கடிதம் எழுதி 12ம் வகுப்பு மாணவி தற்கொலை

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலணி பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். விட்டில் தனியாக இருந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

பக்கத்து வீட்டு பாட்டி மாணவி நீண்ட நேரமாக வெளியில் வராததை கண்டு வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். மாணவி தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதனை அடுத்து அவர் சிறுமியின் தாயிக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் வந்த பிறகு வெங்கமேடு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். அங்கு வந்த போலீசார் (Police) உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் (Government Hospital) கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ALSO READ |  சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு மருத்துவர்கள் இருவர் கைது

பின்னர், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனை. அப்போது இறப்பதற்கு முன்பு அவர் எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதில்.,

sexual harresment ஆல இறக்கும் கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும், என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு, இந்த பூமியில் வாழரத்துக்கு ஆசைப்பட்டேன், ஆனா,  இப்போ பாதியிலேயே போரேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும். பெரியவளாகி நிறைய பேருக்கு உதவி பன்ன ஆசை ஆனா முடியாதில்ல என குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.

இந்த கடிதத்தை ஆதாரமாக கொண்டு வெங்கமேடு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னும் அடங்குவதற்கு முன்பாகவே கரூரில் ஒரு மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ |  பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News