காலை உணவால் நிரம்பி வழியும் கக்கூஸா? “கேவலமா இல்லையா?”வெட்கி தலைகுனிந்த தின *....!

பிரபல தனியார் பத்திரிக்கை ஒன்றில் காலை உணவுத்திட்டத்தை மோசமாக விமர்சித்து முதல்பக்கத்தில் வெளியான கட்டுரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.   

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Aug 31, 2023, 01:56 PM IST
  • காலை உணவுத் திட்டத்தால்
  • கக்கூஸ் நிரம்பி வழிகிறதா?
  • தினமலருக்கு குவியும் கண்டனங்கள்
காலை உணவால் நிரம்பி வழியும் கக்கூஸா?  “கேவலமா இல்லையா?”வெட்கி தலைகுனிந்த தின *....!  title=

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் திமுக அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தால் வேலைக்குச்செல்லும் பெற்றோர் காலை குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் சிரமம் குறைக்கப்படும் என்றும், வறுமை காரணமாக பள்ளிக்கு சாப்பிடாமல் வரும் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கும் என்று வரவேற்பு கிடைத்தது. வாரத்தில் 5 நாட்கள் வழங்கப்படும் இந்த காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டு சில வாரங்கள் ஆகிறது. 

இந்த சூழலில் தான் இன்று பிரபல பத்திரிக்கை ஒன்றில், காலை உணவுத்திட்டத்தை விமர்சிக்கும் வகையில், மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது என்ற தலைப்பில் முதல் பக்கத்திலேயே ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், காலை உணவுத்திட்டத்தால் பலன் இல்லை என்றும், பெற்றோர் காலை உணவு பள்ளியில் பிள்ளைகளுக்கு கிடைக்காமல் போனால் என்ன செய்வது என்று வீட்டிலேயே டிபன் கொடுத்து அனுப்புவதாகவும் எழுதப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வந்தால் அங்கும் ஆசிரியர்கள் மாணவர்களை சாப்பிடச்சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், அப்படி சாப்பிடும் மாணவர்கள் சிறிது நேரத்தில் கழிவறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் அந்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | காலை உணவு திட்டத்துடன் கழிவறையை ஒப்பிட்ட பிரபல நாளிதழ்..! கண்டனம் தெரிவித்த முதல்வர்..!

இந்த கட்டுரை தமிழகம் முழுவதும் வைரலான நிலையில், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டு அவர், உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் சமூகநீதி காக்க உருவானதுதான்  திராவிடப் பேரியக்கம். 'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.

நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்! என காட்டமாக தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். 

இதன் தொடர்ச்சியாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில், ”கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல். கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்! என தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். 

இவர்களைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள், கூட்டணி கட்சியினர் அந்த பத்திரிக்கைக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் அந்த பத்திரிகை தற்போது விளக்கமளித்துள்ளது. அதில் சென்னை,கோவை ,மதுரை ,பாண்டிச்சேரி ,திருநெல்வேலி ,நாகர்கோவில் பதிப்புகளுக்கு ஆசிரியர் வேறொருவர் என்றும், அவர் இந்த செய்தியை வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளது. அதோடு R. சத்தியமூர்த்தி என்பவரை ஆசிரியராக கொண்ட ஈரோடு,சேலம் பதிப்புகளில் மட்டுமே இந்த செய்தி வெளியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த செய்தியால்  வெட்கி தலை குனியக் கூடிய சூழல் உருவாகியுள்ளதால், மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | I.N.D.I.A. கூட்டணி: நான்காவது கூட்டம் தமிழ்நாட்டிலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News