முதலமைச்சர் ஸ்டாலின் ஆண் தாய் - சீனு ராமசாமி புகழாரம்

இயக்குநர் சீனுராமசாமி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 20, 2022, 12:23 PM IST
  • முதலமைச்சரை சந்தித்த இயக்குநர் சீனுராமசாமி
  • புத்தகத்தை பரிசளித்த இயக்குநர்
  • ஆண் தாய் என முதலமைச்சருக்கு புகழாரம்
முதலமைச்சர் ஸ்டாலின் ஆண் தாய் - சீனு ராமசாமி புகழாரம் title=

தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் சீனு ராமசாமியும் ஒருவர். இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவை.

தற்போது அவர் ஜி.வி. பிரகாஷை வைத்து இடிமுழக்கம் என்ற படத்தை இயக்கிவருகிறார். இதற்கிடையே அவர் விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் என்ற படத்தை இயக்கினார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்தில் காய்த்ரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் இளையராஜாவும் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

2019ஆம் ஆண்டே இப்படம் முழுமையாக முடிந்துவிட்டாலும் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்தச் சூழலில் படமானது விரைவில் வெளியாக இருக்கிறது. 

Mk stalin

இந்நிலையில் சீனு ராமசாமி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். அதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்து ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக இருக்கும் தமிழகத்தை ஆளும் ‘ஆண் தாய்’ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வெளிவர இருக்கும் ‘மாமனிதன்’, ‘இடிமுழக்கம்’ ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று..,

 

என் கவிதை புத்தகத்தையும், அதே சமயம் தமிழகத்தில் நோயும் இயற்கை சீற்றத்துக்கெதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய போர்க்கால நடவடிக்கைளுக்கு நன்றி கூறி ஜான் ரீடு எழுதிய 'உலகை குலுக்கிய பத்து நாட்கள்' நூலினை அவருக்கு தந்தேன். அவர்தம் வரலாற்று நூலின் முதல் பாகமான ‘உங்களில் ஒருவன்’ நூலில் கையெப்பமிட்டு பரிசாக தந்தார். ‘மக்கள் அன்பன்’ என் கண்ணே கலைமானே உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடன் இருந்து வாழ்த்தினார்” என குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News