"மாணவர் நலன் காக்க" குறைந்தபட்ச பொது அறிவு கூடவா முதலமைச்சருக்கு இல்லை? ஸ்டாலின் விளாசல்

அரசியல் ஆதாயம் தேடுவதாக இருந்தால் ‘அதிமுக அரசு கொண்டு வந்த மசோதாவை நிறைவேற்று’ என்று திமுக போராடுமா? குறைந்தபட்ச பொது அறிவு கூடவா முதலமைச்சருக்கு இல்லை? -தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 24, 2020, 12:03 AM IST
  • இணைந்து போராடுவோம் என அழைத்தால் "அரசியல் ஆதாயம்" என்கிறார் தமிழக முதல்வர்: ஸ்டாலின்
  • தமிழக ஆளுநருக்கு எதிராக ராஜ் பவனுக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • தமக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறார் முதல்வர்: ஸ்டாலின்
  • திமுக அறிவித்துள்ள போராட்டம் என்பது அரசியல் ஆதாயம் தேடும் செயல் -தமிழக முதல்வர்
"மாணவர் நலன் காக்க" குறைந்தபட்ச பொது அறிவு கூடவா முதலமைச்சருக்கு இல்லை? ஸ்டாலின் விளாசல் title=

CHENNAI: மாணவர் நலன் காக்க ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து போராடுவோம் என அழைத்தால் "அரசியல் ஆதாயம்" என்கிறார் தமிழக முதல்வர். அரசியல் ஆதாயம் தேடுவதாக இருந்தால் "அதிமுக அரசு (AIADMK Govt) கொண்டு வந்த மசோதாவை நிறைவேற்று" என்று திமுக போராடுமா? குறைந்தபட்ச பொது அறிவு கூடவா முதலமைச்சருக்கு இல்லை? என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் (M K Stalin) தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கைகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் (Banwarilal Purohit) ஒப்புதல் அளிக்காவிட்டால், நாளை (அக்டோபர் 24) ராஜ் பவனுக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்த முதலமைச்சர் கே பழனிசாமி முன் வந்து இந்த விஷயத்தில் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழக ஆளுநருக்கு எதிராக ராஜ் பவனுக்கு வெளியே போராட்டம்  நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி (Edappadi Palaniswami), "திமுக அறிவித்துள்ள போராட்டம் என்பது அரசியல் ஆதாயம் தேடும் செயல்" என 7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் குறித்து பதிலடி தந்துள்ளார். 

ALSO READ |  7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதி: அமைச்சர் ஜெயகுமார்

முதல்வரின் கருத்து பதில் அளிக்கும் விதமாக, திமுக தலைவர் ஸ்டாலின், "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு (Medical Quota Bill) வழங்கும் மசோதாவுக்கு அனுமதி கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதினேன். இன்னமும் நான்கு வார அவகாசம் சொல்லி பதில் அனுப்பியிருக்கிறார். மாணவர் நலன் காக்க இணைந்து போராடுவோம் என்று அதிமுக அரசை அழைத்தேன். ‘திமுக அரசியல் ஆதாயம் தேடுகிறது’ என்கிறார் முதலமைச்சர்.

 

அரசியல் ஆதாயம் தேடுவதாக இருந்தால் ‘அதிமுக அரசு கொண்டு வந்த மசோதாவை நிறைவேற்று’ என்று திமுக போராடுமா? குறைந்தபட்ச பொது அறிவு கூடவா முதலமைச்சருக்கு இல்லை?

ALSO READ | அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு

தமக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறார் போலும்! அவர் ஏதாவது ஒரு ஊரில் தனியாக நடந்து போய் மக்கள் மத்தியில் துணிச்சலாகக் கேட்டுப்பார்க்கலாம் எனக் கூறியுள்ளார். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News