அதிமுக இருக்கிற இடம் தெரியாமல் போகப்போகுது - அடித்து சொல்லும் கொங்கு மண்டல திமுக அமைச்சர்

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக இப்போது ஜெயிச்சு இருக்கிற இடங்களில் கூட ஜெயிக்காது என அமைச்சர் முத்துசாமி அடித்து கூறுகிறார். திமுக வரலாற்று வெற்றியை பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 16, 2024, 08:09 AM IST
  • முதலமைச்சரின் பணிக்கு மக்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளார்கள்
  • 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்
  • அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என அமைச்சசர் முத்துசாமி பேட்டி
அதிமுக இருக்கிற இடம் தெரியாமல் போகப்போகுது - அடித்து சொல்லும் கொங்கு மண்டல திமுக அமைச்சர் title=

லோக்சபா தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் கோவை கொடீசியா மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக இப்போது  வெற்றி பெற்றிருக்கிற இடங்களில்கூட ஜெயிக்க முடியாது, திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முதலமைச்சர் செய்த மக்கள் பணிக்காக லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றியை கொடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | இந்தியா கூட்டணியின் 41வது வெற்றி! திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் வெற்றி முழக்கம்!

தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துசாமி, " திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டு செய்கின்ற பணி, மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றதோ அதை தீர்க்க வேண்டும், அவர்களுக்காக ஒவ்வொரு நிமிடமும் யோசித்து அதை செய்ய வேண்டும் என்று அவர் செய்கின்ற காரணத்தினால் தான் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற  தேர்தலில் மாபெரும் வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு ஒரு நன்றி பாராட்ட வேண்டும் என்று சொன்னபோது கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டாம் என்று சொல்லி புறப்பட்டு சென்றுவிட்ட நிலையில், கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள் எல்லாம் பேசித்தான் பிறகு அதனை ஏற்றுக்கொண்டார். 

அந்த அளவிற்கு அவர் எதையும் தன்னடக்கத்துடன் செய்யக்கூடிய முதலமைச்சராக இருக்கிறார். இந்தியாவிலேயே இந்தியா கூட்டணி ஒரு மாநிலம் முழுவதும் வெற்றி பெற்ற ஒரு மாநிலம் எங்கும் கிடையாது. அதை முதலமைச்சர் தமிழ்நாட்டில் செய்திருக்கிறார். அதற்கு காரணம் அவர் மக்களுக்கு செய்த சேவையும், மேலும் சேவை செய்வார் என்று மக்கள் அவர் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையும் தான். கட்சியில் இருக்கின்ற அடிமட்ட சகோதரர்கள் உடன்பிறப்புகள் செய்த பணிதான் தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம். எனவே, தனக்கு  என்ன பாராட்டுகளை கொடுத்தாலும் நான் அவர்களுக்கு கொடுக்கிறேன் என்று முதல்வர் கூறிவிட்டார். எனவே அப்படிப்பட்ட தலைவர் உள்ள காரணத்தினால் தான் இப்படிப்பட்ட வெற்றியை பெற்று இருக்கிறோம்.

தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று அதிமுக எடுத்துள்ள முடிவு அவர்கள் சூழ்நிலையை மனதில் வைத்து எடுத்திருக்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கின்ற எந்த நடவடிக்கையையும் மீறி அதிமுக-வால் எதுவும் செய்ய முடியாது என்ற காரணத்தினாலும் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார்கள். இந்த முடிவை எடுக்க வேண்டிய ஒரு சூழலில் அதிமுகவினர் இருக்கிறார்கள். வருகிற 2026ல் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று அதிமுக சொல்லிக் சொல்லிக் கொண்டிருக்கலாமே தவிர, அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேர்தலை சந்திக்க இருக்கும் சூழலில்  நிச்சயமாக இதைவிட பெரிய வெற்றியாக தான் திமுகவுக்கு இருக்கும். இந்த இரண்டு ஆண்டுகளில் முதல்வர் செய்யக்கூடிய பணிகள் அந்த வெற்றிக்கு இன்னும் கூடுதல் பலத்தை கொடுக்கும் என்றும்" அமைச்சர் முத்துசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க | தொழிலாளர்களை பாதுகாப்பு பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு ரூ. 5000 அபராதம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News