குஷ்புவுக்காக கொந்தளித்தவர்கள் வானதி சீனிவாசன் கொச்சை பேச்சை கண்டித்தார்களா? திமுகவினர் ஆவேசம்

குஷ்பூவை அவதூறாக பேசியதற்காக திமுகவை கடுமையாக வசைபாடியவர்கள் இப்போது எம்எல்எஏவாக இருக்கும் வானதி சீனிவாசன் திமுகவினரைப் ற்றி பேசிய அறுவருக்கத்தக்க கொச்சைப் பேச்சை கண்டிக்காதது ஏன்? என திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 3, 2023, 03:04 PM IST
  • திமுகவினர் குறித்து அவதூறு பேச்சு
  • வானதி சீனிவாசனுக்கு எழும் கண்டனங்கள்
  • மன்னிப்பு கேட்க திமுகவினர் வலியுறுத்தல்
குஷ்புவுக்காக கொந்தளித்தவர்கள் வானதி சீனிவாசன் கொச்சை பேச்சை கண்டித்தார்களா? திமுகவினர் ஆவேசம் title=

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வானதி சீனிவாசன், சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மத்திய அரசின் 9 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதில் திமுகவினர் மற்றும் அக்கட்சி கவுன்சிலர்கள் பற்றி அறுவருக்கத்தக்க வகையில் கொச்சையாக பேசினார். இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோவில் பேசும் வானதி சீனிவாசன், " திராவிட முன்னேற்ற கழகத்தோட எம்.எல்.ஏ, கவுன்சிலரா இருந்தா அவரு ஒரு வீட்டுல இருக்க மாட்டாரு. திராவிட முன்னேற்றக் கழகத்துல ஒரு பண்பாடு வெச்சிருக்காங்க. அவங்க காலையில் ஒரு வீட்டுல இருப்பாங்க- சாயங்காலம் ஒரு வீட்டுல இருப்பாங்க. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஜீன் அது" என பேசியுள்ளார்.

மேலும் படிக்க | மேகதாது விவகாரத்தில் எடப்பாடி தெரிந்த விஷயத்தை சொல்ல மறுக்கிறார் - முத்தரசன்

அவரின் இந்த பேச்சுக்கு திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் கோவை மற்றும் பொள்ளாச்சியில் காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவராகவும் இருக்கும் வானதி சீனிவாசன், அண்மையில் குஷ்பூ குறித்து அவதூறாக பேசி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய நிலையில், வானதி சீனிவாசனே கொச்சையாக பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

திமுகவில் இருந்த சிவாஜி கிருஷ்ண மூர்த்தியின் பேச்சை பலரும் கண்டினத்தனர். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், காவல்துறையில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. குஷ்பூவும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாக இது குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அவர் மீது சட்ட நடவடிக்கையையும் எடுக்கப்பட்டது. சொந்த கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் தருமபுரி எம்பி செந்தில்குமார் உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்த பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

ஆனால் இப்போது எம்எல்ஏவாக இருக்கும் வானதி சீனிவாசன் தான் வகிக்கும் பொறுப்புக்கு அழகில்லாமல் திமுகவினரையும், திமுக கவுன்சிலர்களையும் கொச்சைப்படுத்தியிருப்பதாக திமுகவினர் ஆதங்கப்படுகின்றனர். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என்பவர்கள், அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத வகையில் பேசியிருக்கும் வானதி சீனிவாசன் பேச்சுக்கு குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? என்று திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். திரைத்துறை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், கட்சி சாராதவர்கள் மற்றும் பாஜகவினர் கூட கடும் எதிர்வினையாற்றிய நிலையில், வானதி சீனிவாசனின் பேச்சுக்கு எந்தவொரு ரியாக்ஷனும் கொடுக்காமல் அமைதி காப்பது ஏன்? இது அவதூறு இல்லையா? என்று இணையத்தில் இருக்கும் திமுகவினர் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

மாற்றுக் கட்சியினர் ஏதேனும் திமுகவினர் குறித்து குற்றம் சாட்டிவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் திமுக தலைமைக் கழகம், சொந்த கட்சி மற்றும் தொண்டர்கள் குறித்து அவதூறாக, கொச்சையாக பேசினால் கூட அமைதியாக கடந்து செல்வது வேதனையளிப்பதாகவும் திமுக உடன்பிறப்புகள் வேதனை கலந்த கொந்தளிப்பை இணையத்தில் கொட்டி தீர்த்துள்ளனர். 

மேலும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News