சூடுபிடிக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்; வேட்பாளர்கள் தேர்வு தீவிரம்!

திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இத்தொகுதில் நிறப்படும் வேட்பாளர்கள் தேடலினை கட்சி தலைமைகள் துவங்கியுள்ளது!

Last Updated : Jan 1, 2019, 01:19 PM IST
சூடுபிடிக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்; வேட்பாளர்கள் தேர்வு தீவிரம்! title=

திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இத்தொகுதில் நிறப்படும் வேட்பாளர்கள் தேடலினை கட்சி தலைமைகள் துவங்கியுள்ளது!

திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வழக்கமாக ஒரு தொகுதி காலியாகி 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி திருவாரூர் தொகுதிக்கு வருகிற  பிப்., 2-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்நிலையில் நேற்று, திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வெளியான அறிவிப்பின் படி, திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தைகள் உடனடியாக அமுலுக்கு வந்தது.

திருவாரூர் இடைத்தேர்தல் முக்கிய தேதிகள்...

  • வேட்புமனு தாக்கல் - 03.01.2019
  • வேட்புமனு கடைசி நாள் - 10.01.2019
  • வேட்புமனு திரும்ப பெற - 14.01.2019 
  • தேர்தல் நாள் - 28.01.2019
  • வாக்கு எண்ணிக்கை - 31.01.2019

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து இடைத்தேர்தல் பணியை அதிமுக, திமுக இரு கட்சிகளும் உடனடியாக தொடங்கியுள்ளன. இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் கொடுக்கலாம் என்று இரு கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது. 

மனு கொடுத்தவர்களிடம் இருகட்சி மூத்த தலைவர்களும் வரும் ஜனவரி., 4-ஆம் நாள் நேர்காணல் நடத்தவுள்ளனர். 

திமுக சார்பில் திருவாரூரில் களம் இறங்க உள்ளூர் நிர்வாகிகள் பலரிடமும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் அங்கு போட்டியிட திமுக நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களில் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்ட திருவாரூர் மாவட்ட அதிமுக பொருளாளர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆகியோர் இடையோ போட்டி நிலவுகிறது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜர் திருவாரூர் நகர செயலாளர் பாண்டியன் இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Trending News