நான் இல்லையென்றால் ஸ்டாலின் தான் முதல்வராவார்: கருணாநிதி

Last Updated : May 11, 2016, 01:39 PM IST
நான் இல்லையென்றால் ஸ்டாலின் தான் முதல்வராவார்: கருணாநிதி  title=

என்.டி.டி.வி தனியார் தொலைக்காட்சிக்கு கருணாநிதி அளித்த பேட்டியில் நடக்க இருக்கும் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால் மீண்டும் 6-வது முறையாக நானே முதல்வராக பதவி ஏற்பேன். 

இதைதான் ஸ்டாலின் விரும்புகிறார். அவர்க்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை. எனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால் ஸ்டாலின் முதல்வர் பதவில் அமர்வார்.

கருணாநிதி பின்பு ஸ்டாலின் முதல்வராவர் என கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே ஸ்டாலினுக்கு தலைவர் பதவி வழங்க வேண்டும் என தொண்டர்கள் கூறியபோது அதற்க்கு அழகிரி எதிர்ப்பு தெரிவித்தார். அழகிரி கட்சியைவிட்டு நீக்கப்பட்டதால் ஸ்டாலினுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Trending News