தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திய திமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையினையும் நிறுத்தி விடுவார்கள் என்று மேட்டுப்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகை காயத்ரி ரகுராம் பேசியுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகர பகுதியில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்களிக்க வலியுறுத்தி நடிகை காயத்ரி ரகுராம் பரப்புரை மேற்கொண்டார். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஓடந்துறை பகுதியில் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டார் நடிகை காயத்ரி ரகுராம்.
மேலும் படிக்க | அதிமுக தொண்டர்கள் அனைவரும் தினகரன் பின்னால் வந்துவிடுவார்கள்: அண்ணாமலை ஆரூடம்
அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசியதாவது, "தற்போது தங்கம் விற்கும் விலைக்கு யாராவது வாங்க இயலுமா.. குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்கம் வாங்வே முடியாது என்ற நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கி வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை இந்த திருட்டு திமுக அரசு நிறுத்தி விட்டது.. இதே போல் மாணவ மாணவிகளுக்கு வழங்ஙப்பட்டு வந்த மடி கணினி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தி விட்ட திமுக வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பெண்களுக்கு மாதாமாதம் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாயையும் நிறுத்தி விடுவார்கள்.. ஆகவே திமுக வுக்கு வாக்களிக்க கூடாது..பத்தாண்டுகள் மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு ஒரு வேஸ்ட்..
ஜிஎஸ்டி விதித்து அனைத்து விலைகளும் உயர்ந்து விட்டது..எனவே அதிமுக வேட்பாளருக்கு சிந்தாமல் சிதறாமல் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.. பிரசாரத்தின் போது மேட்டுப்பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ சின்னராஜ்,நகர செயலாளர் வான்மதிசேட்,நகர துணை செயலாளர் எம்.என்.பாலன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தேமுதிக, எஸ்டிபிஐ கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
மறுபுறம், பொதுமக்களை அடிக்கடி சந்திக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன் என்று அதிமுக வேட்பாளர் தங்கவேல் பொதுமக்களுக்கு உறுதி அளித்து வாக்கு சேகரித்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட க.பரமத்தி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் தங்கவேல் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எலவனூர் பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வாக்கு சேகரித்து பேசிய கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேல், கரூர் மாவட்டத்தில் விவசாயம் நெசவு ஆகிய இரண்டு தொழில்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தற்பொழுது நெசவு தொழில் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது இந்த பகுதி மக்கள் நெசவு தொழிலையே நம்பியே உள்ளனர் என்றும் இரண்டு தொழில்களின் வளர்ச்சிக்காகவும் தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். உங்களை அடிக்கடி சந்தித்து குறைகளை கேட்டு அறியும் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன் என பொதுமக்களிடம் உறுதி அளித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் நெடுஞ்செழியன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
மேலும் படிக்க | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டி? - வந்தது ரகசிய உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ