வரதட்சணை கொடுமையால் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை!

வரதட்சணை கொடுமையால் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்த பெண்!

Last Updated : Mar 6, 2018, 10:24 AM IST
வரதட்சணை கொடுமையால் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை! title=

கணவரின் தகாத உறவு குறித்து கேட்டபோது, கணவர் திட்டியதால் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை அடுத்த ஆவடியில் உள்ள முரளி என்பவரின் மகன் ரோஸ் என்பவரை, ஜீவிதா என்ற பெண் 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதை அறிந்த ஜீவிதா அதிர்ச்சியடைந்துள்ளார். 

அதுகுறித்த தனது கணவரிடம் கேட்டபோது, அவரது மாமனார் மற்றும் மாமியார் உள்ளிட்டோர் வரதட்சனை கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனது குடும்பத்திடம் ஜீவிதா கூற, பெரியவர்கள் பேசி சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

இருப்பினும் ரோஸ் தனது தகாத உறவை தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக மீண்டும் ஜீவிதா கேட்க, ரோஸ் கடுமையான சொற்களால் அவரை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஜீவிதா தற்கொலை செய்துகொள்ள ரயிலில் ஏறியுள்ளார். 

சென்னை அடையாறு பாலத்தின் மீது ரயில் சென்றபோது, அதிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து அவரின் உடலை கைப்பற்றிய காவல்துறை, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Trending News