இந்த கிறிஸ்துமஸூக்கு குமரியில் இருந்து இப்படி ஒரு கோரிக்கை வரும் என்று கனவிலும் நினைத்து பார்த்திருக்கமாட்டார் இயேசு. குடும்ப கஷ்டம், கல்யாணம், உடல் ஆரோக்கியம் குறித்தெல்லாம் கோடிக்கணக்கான வேண்டுதல்களை வைக்கும் மக்களுக்கு மத்தியில், பார்டி வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து இயேசுவிடம் முறையிட்டிருக்கிறார் குடிமகன் ஒருவர். என்னோட பிறந்தநாளுக்கு நான் ட்ரீட் வைக்கிறேன், உன்னோட பிறந்தநாளுக்கு நீ ட்ரீட் வைக்க மாட்டியா? என உரிமையோடு இயேசுவிடம் கேட்டிருக்கிறார் அந்த குடிமகன்.
மேலும் படிக்க | ஆத்தாடி இவ்ளோ பெரிய பாம்பா..கிடுகிடுன்னு ஏறுது பாருங்க: வீடியோ வைரல்
கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் தேவாலயங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு மற்றும் கூட்டு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு குடும்பம் குடும்பமாக மக்கள் சென்று பங்கேற்றனர். பின்னர், புத்தாடை அணிந்து, விருந்து ஏற்பாடு செய்து உறவினர்களுடன் கிறிஸ்துமஸை கொண்டாடினர். குமரியை சேர்ந்த இந்த குடிமகனும் அப்படி தான் கொண்டாடி இருந்திருக்கிறார். குடும்பத்துடன் விழாவை சிறப்பித்த அவர், பின்னர் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட சென்றிருக்கிறார்.
அங்கு மதுவாங்கி அருந்தி மகிழ்ச்சியில் இருந்த அவர், தேவாலயத்தில் வைத்த கோரிக்கையை விட குடிபோதையில் வைத்த கோரிக்கை தான் வைரலாகியுள்ளது. அந்த கோரிக்கை என்னவென்றால், நான் என்னுடைய பிறந்தநாளுக்கு என் நண்பர்களுக்கு ட்ரீட் வைத்தேன், உன்னுடைய பிறந்தநாளுக்கு எனக்கு ட்ரீட் வைக்கமாட்டீரா இயேசுவிடம் நேரடியாக கேட்கிறார் அவர். அதற்காக இயேசுவிடம் மிகவும் சத்தமாக மன்றாடவும் செய்கிறார். அவருடைய ஆக்ஷன் எல்லாம் நகைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு டிவிஸ்ட் நடக்கிறது. அதாவது, வானத்தில் இருந்து அவர் கேட்ட குவார்டர் கையில் வந்து விழுகிறது. உடனே உற்சாகத்தில் மிதக்கிறார் அந்த குடிமகன். அதாவது இயேசுவே அவருக்கு குவார்ட்டர் கொடுத்துவிட்டாராம். நண்பர்களை செட் செய்து காமெடிக்காக அந்த குடிமகன் எடுத்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ