மதுபோதை மனதை கெடுத்து மண வாழ்க்கையையும் கெடுக்கும், உயிரையும் குடிக்கும் என்பது அவ்வப்போது வெளியாகும் செய்திகள் சொல்லும் சோகக்கதைகளாக இருக்கின்றன.
“குடி குடியை கெடுக்கும்” என்று கூறுவார்கள் அதாவது மது பழக்கம் உயிரை குடிப்பதோடு அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களது வாழ்வையும் நாசமாக்கிவிடும்.
“மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடு” என்று எச்சரிக்கை ஆங்காங்கே இருந்தாலும் குடியை விட தயாராக இல்லாததால், உயிரை விடும் சம்பவங்கள் கவலைகளை அதிகரிக்கின்றன.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காந்திநகர் பிள்ளையார் கோவில் தெருவில் ராஜாராம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். மனைவி ரேவதி மற்றும் இரு மகன்களுடன் நிம்மதியாக வாழ்ந்துவந்த 45 வயது ராஜாராம், டிரைவராக வேலை பார்த்து வந்தார். ஒரு கட்டத்தில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராஜாராம் போதையில் வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
Also Read | காதலன் ஏற்காததால் விரக்தி; கணவன், குழந்தைகளை விட்டு வந்த பெண் தற்கொலை
நேற்று முன்தினம் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ராஜாராம் மனைவி ரேவதியிடம் சண்டை போட்டுள்ளார். குடிபோதையில் இருந்த கணவனின் வார்த்தைகளால் ஆத்திரம் அடைந்த ரேவதி, அருகில் கிடந்த கிரிக்கெட் மட்டையால் ராஜாராம் தலையில் அடித்துள்ளார்.
கிரிக்கெட் மட்டையால் அடிவாங்கி படுகாயம் அடைந்த ராஜாராம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரேவதியை கைது செய்து, அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
குடும்பத்தைக் காக்கும் பொறுப்பில் இருப்பவர்கள், மது என்னும் கொடிய அரக்கனுக்கு அடிமையாகி குடும்பத்தை நிர்கதியாக்கிவிடுகிறார்கள். மதுவினால் ஏற்படும் சிக்கல்கள் தொடர்கதையாய் நீண்டுக் கொண்டே போகிறது.
ALSO READ | 14 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR