கொரோனா தொற்று பாதிப்பு இது வரை இல்லாத அளவு அதிகரித்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள், தடுப்பூசி போடும் நடவடிக்கையை எடுப்பது உட்பட பல தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா தொற்று (Corona Virus) பரவல் மீண்டும் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வுகளை ஒத்திவைப்பதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது. மே 5-ம் தேதி தொடங்க இருந்த பொது தேர்வுகள், மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கன்வே, கொரோனா தொற்று பரவல் காரணமாக 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, திறனறி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் இரு நாட்களுக்கு முன்பாக அறிவித்தது. ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ALSO READ | கொரோனா காலத்தில் நோய் எதிப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் வேம்பு, கற்றாழை!
நேற்று, ஐசிஎஸ்இ (ICSE ), ஐஎஸ்சி (ISC) நடத்தும்10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக CISCE எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் அறிவித்தது.
இது தொடர்பாக, ஜூன் மாதம் முதல் வாரத்தில் தேர்வுகள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவில் தேசிய அளவில் ஒரே நாளில் 2,00,000த்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று (Coronavirus) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 28 லட்சத்து 09 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,61,500 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்தை கடந்தது. 18.01 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,77,150 பேர் உயிரிழந்துள்ளனர்.
ALSO READ | சில மாநிலங்களில் சரியான திட்டமிடல் இல்லை, 9% தடுப்பூசிகள் வீணாகியுள்ளன:மத்திய அரசு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR