மேட்டூர் அணையின் தண்ணீர் திறப்பு 1000 கன அடியாக குறைப்பு...

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது!

Last Updated : Jan 23, 2019, 12:46 PM IST
மேட்டூர் அணையின் தண்ணீர் திறப்பு 1000 கன அடியாக குறைப்பு... title=

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1,250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 70 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 69 கன அடியாக குறைந்துள்ளது.

இதனையடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 1000 கன அடியாக குறைக்கப்பட்டது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

நேற்று 71.91 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 71.80 அடியாக குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News