தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு இடமில்லை-துரை வைகோ

தமிழகம் திராவிட மண்  மதவாத அரசியலுக்கு இடம் இல்லை என மக்கள் தேர்தல் மூலம் தெரிவித்துள்ளனர்- துரை வைகோ பேட்டி  

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Jun 15, 2024, 03:40 PM IST
  • தமிழக அரசியல் குறித்து பேசிய துரை வைகோ
  • இங்கு மதவாத அரசியலுக்கு இடமல்ல
  • மேலும் கூறியது என்ன?
தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு இடமில்லை-துரை வைகோ title=

கோவை கொடிசியாவில் திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக தலைமை கழக செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்தியா கூட்டணிக்கு வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இந்த விழா என தெரிவித்த அவர் திமுக அரசியல் 3 ஆண்டு கால சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று தான் பார்க்க வேண்டும் எனவும் தமிழகம் திராவிட மண்  மதவாத அரசியலுக்கு இடம் இல்லை என்று மக்கள் வாக்குகள் செலுத்தி விடை அளித்துள்ளனர் என்றார்.

திமுக கூட்டணியில் மதிமுக  தொடரும், தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்தும்  விதமாக சுற்று பயணம் செய்ய உள்ளேன் என கூறினார்.மறுபடியும் திமுக கூட்டணி ஒரு மிகப் பெரிய வெற்றியை நாங்கள் பெறுவோம் .. அதற்கு நாங்கள் அந்த தேர்தலை ஒட்டி நாங்கள் செய்ய வேண்டிய பணிகள் நாங்கள் ஆயத்தமாகவும் சுட்டி காட்ட விரும்புகிறேன் என்றார்.

மின்சார கட்டணத்தை பொறுத்தவரை  தமிழக அரசு இதுவரை உயர்த்தும் என அறிவிக்கவில்லை. அது ஒரு வதந்தி என தெரிவித்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொருத்தவரை மதிமுக திமுக கூட்டணியில்  தொடரும் எனவும் கூறினார்.மக்களவைத் தேர்தல் வெற்றி என்பது மாற்றத்திற்கான ஒரு ஆரம்பம். பாஜகவிற்கு என தனி பெரும்பான்மை கிடையாது.

கடந்த பத்தாண்டில் பாஜக மக்கள் விரோத்திற்கு   எதிரான சட்டங்கள் கொண்டு வந்துள்ளனர் .இனி  அதற்கு இடமில்லை புதிய ஆரம்பம் புதிய நம்பிக்கை கொடுத்துள்ளது என குறிப்பிட்டார். மத்திய அரசின் சர்வதிகார போக்கு  முடிவுக்கு வந்துள்ளது

நாடாளுமன்ற செயல்பாடுகளில் முடிந்த அளவுக்கு பாஸ் மார்க் வாங்க வேண்டும் . தமிழக மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படுவேன்.தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக வாஷ் அவுட்  பாஜகவினர் 11 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளனர்.

தமிழகம் மட்டுமல்ல உத்திர பிரதேசமும்  மதவாதத்திற்கான மண் அல்ல என தேர்தல் மூலம் தெரிய வந்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.

மேலும் படிக்க | திருப்பத்தூர் : 11 மணி நேர போராடத்துக்குப் பிறகு பிடிக்கப்பட்ட சிறுத்தை

நாம் தமிழர் கட்சி பொறுத்தவரைக்கும் கூட்டணி அமைக்காமல்  தனித்து போட்டியிட்டு 8 % வாக்குகள் பெற்று இருப்பது  பாராட்டத்தக்கது. மதிமுகவிற்கும்,  நாம் தமிழர் கட்சிக்கும் கொள்கை ரீதியான பல வேறுபாடுகள் இருந்தாலும் சீமானின் உழைப்பை பாராட்டத்தக்க வேண்டிய விஷயம் என்றார்.

மேலும் மாஞ்சோலை விவகாரத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு நிக்க வேண்டும் அரசு தேயிலை தோட்டங்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News