தேர்தல் அறிக்கைகளில் அளித்த உறுதிமொழிகளை அதிமுக ஆட்சி தவறாது நிறைவேற்றி வந்துள்ளதாக தமிழக முதல்வர் குற்றசாட்டு!!
நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் அறிக்கைகளில் அளித்த உறுதிமொழிகளை அதிமுக ஆட்சி தவறாது நிறைவேற்றி வந்துள்ளதாக பிரச்சாரம் செய்த முதலமைச்சர், திமுக பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். நாடு வளம்பெறவும், மேலும் செழிக்கவும் திறமை வாய்ந்த பிரதமரின் தலைமை தேவை என்றும், திறமையான, உறுதியான பிரதமராக திகழும் மோடி மீண்டும் அப்பதவிக்கு வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டவாறு உறுதிமொழிகளை நிறைவேற்றிய ஆட்சி அதிமுக ஆட்சி என்றும் அவர் விளக்கிப் பேசினார். மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களையும் சுட்டிக்காட்டி முதலமைச்சர் பிரச்சாரம் செய்தார்.
அதிமுக ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் தமிழகம் வளர்ச்சியை நோக்கி பீடுநடை போடுகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.