'தவறான மருந்தை சொல்கிறார் மா.சுப்பிரமணியன்' - கொந்தளித்த இபிஎஸ்... என்ன விஷயம்?

Edappadi Palanisamy: கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு அளிக்கப்படும் விஷ முறிவு மருந்து தட்டுப்பாடு குறித்து நான் கூறியதற்கு, அந்த மருந்துக்கு பதிலாக தவறாக வேறொரு மருந்து குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Jun 22, 2024, 11:20 AM IST
  • மொத்தம் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் - இபிஎஸ்
  • கள்ளச்சாரயம் குடித்து தாமதமாக வந்ததால் உயிரழப்பு என்கிறார்கள், அது தவறு - இபிஎஸ்
  • இதை விட முக்கிய பிரச்சனை என்ன உள்ளது - இபிஎஸ்
'தவறான மருந்தை சொல்கிறார் மா.சுப்பிரமணியன்' - கொந்தளித்த இபிஎஸ்...  என்ன விஷயம்? title=

Edappadi Palanisamy Kallakurichi Issue Update: தமிழக சட்டப்பேரவையின் (TN Assembly Meeting 2024) மூன்றாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இன்றும் கருப்புசட்டை அணிந்து வந்த அதிமுகவினர், சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய உடனே கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் குறித்து பேச அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறையிட்டனர்.

சபாநாயகர் அதிமுகவின் கோரிக்கை ஏற்க மறுப்பு தெரிவித்தார். மக்கள் பிரச்சனைகளை பேசும் நேரத்தில் உங்கள் நெருக்கடியை காண்பிக்காதிர்கள் என்றும் கேள்வி நேரம் முடிந்தவுடன் அனுமதி தரப்படும் என சபாநாயர் தெரிவித்தும் எதிர்கட்சியினர் இவ்வாறு செய்வது ஏற்படுயது இல்லை என பதில் அளித்தார். எதிர்கட்சி தலைவரை பேச அனுமதி தர வேண்டும். அதிமுகவினர் கோஷமிட்டு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் விவகாரம் குறித்து பேச அனுமதி வழங்காததை கண்டித்து அதிமுக சட்டப்பேரவை புறக்கணித்தனர்.

'தவறான மருந்தை குறிப்பிடும் மா.சு'

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy),"கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழந்த விவாகரத்தில் தங்களுக்கு சட்டப்பேரவையில் பேச அனுமதிக்கவில்லை. மது அருந்தியவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்தும், சிகிச்சை பெறுபவர்கள் நிலை என்ன என்பது குறித்து அறிய பேச அனுமதி கேட்டும், சபாநாயகர் அனுமதி தரவில்லை.

மேலும் படிக்க | கள்ளச்சாராயம் விற்பனைக்கு காவல்துறை உடந்தை - கருணாபுரம் மக்கள் குற்றச்சாட்டு

தங்களுக்கு வந்த தகவலின்படி, 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 பேர் இறந்துள்ளனர் என செய்தி வருகிறது. 
அரசு மெத்தன போக்கு கடைப்பிடிக்கிறது. விஷ முறிவு மருந்துகள் அரசு மருத்துவமனையில் இல்லை. நான் Fomepizole என்ற விஷ முறிவு மருந்தே தட்டுப்பாடு உள்ளதாக கூறினேன். ஆனால், அல்சர் பாதிப்புக்கு பயன்படுத்தும் Omeprazole மருந்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறாக கூறுகிறார். 

'சிபிஐ விசாரணை வேண்டும்'

கள்ளச்சாரயம் குடித்து தாமதமாக வந்ததால் உயிரழப்பு என்கிறார்கள். அதற்கு அரசுதான் காரணம். கள்ளச்சாரயத்தால் இறந்தவர்கள் அனைவரையும் வெவ்வேறு காரணங்களால் இறந்ததாக கூறியதால்தான் உயிரழப்பு அதிகரிக்க காரணம். உயிரழந்தவர்கள் கள்ளச்சாரயத்தால் இறக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் கூறிய தவறான தகவல் தான் கள்ளச்சாரய மரணம் அதிகரித்தது காரணம்.

திமுக, கூட்டணி கட்சியினர் கள்ளச்சாராயம் விவகாரம் முதல்வர்களுக்கு தெரியாது என கூறுவது ஏற்க முடியாது. திமுகவினருக்கும், காவல்துறையினருக்கும் இதில் தொடர்பு இருக்கிறது, நீதி கிடைக்க வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும். ஒரு நபர் விசாரணை ஆணையத்தால் உண்மை வெளிவராது. உண்மை குற்றவாளிகளை அடையாளம் காட்ட வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும்" என்றார்.

கேள்வி நேரம் முடிந்த உடன் அனுமதி தரப்படும் என சபாநாயகர் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "மக்களின் பிரச்சனை, அங்கு உயிர் சென்று கொண்டிருக்கிறது. இதை விட முக்கிய பிரச்சனை என்ன உள்ளது. கடந்த காலத்தில் சட்டபேரவையில் திமுகவினர் எப்படி நடந்துகொண்டார்கள் என அனைவருக்கும் தெரியும். திமுக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருப்பதற்கு 25 ஆண்டுகாலம் ஒப்பந்தம் போட்டுவிட்டதால் திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் பேச மறுக்கிறது" என குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க | நீங்கள் அழித்தால் நாங்கள் காய்ச்சுவோம்...! போலீசார் உடன் மல்லுக்கட்டும் சாராய வியாபாரிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News