close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு...

பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்ள 6 தமிழக MP-க்களின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் ஜூலை 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

Updated: Jun 25, 2019, 07:20 PM IST
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு...

பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்ள 6 தமிழக MP-க்களின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் ஜூலை 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்ள தமிழ்நாட்டு MP-க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவர்களில் கனிமொழி மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று மக்களவை சென்றுவிட்டதால் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டார்.

இந்நிலையில், தமிழகத்தில் காலியாகும் இந்த 6 மாநிலங்களவை  உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி  நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் ஜூலை 1 முதல் 8 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும். ஜூலை 9-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனுக்களை திரும்பப்பெற ஜூலை 11-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒரு MP-யை தேர்வுசெய்ய 34 MLA-க்கள் வாக்களிக்க  வேண்டும். தற்போது சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் திமுக-வை சேர்ந்த 3 MP-க்களும், அதிமுக-வை சேர்ந்த 3 MP-க்களும் மாநிலங்களவை உறுப்பினர்களாகும் வாய்ப்புள்ளது. 

தமிழக சட்டசபையில் ஜூலை 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்து அன்று மாலை சுமார் 5 மணியளவில் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.