புதுடில்லி: தமிழகம், மேற்கு வங்கம், உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவிக்கும்.
தேர்தல் ஆணையத்தின் குழு இன்று மாலை 4.30 மணிக்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இது குறித்த தகவல்களை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றிற்கான சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நான்கு மாநிலங்களின் சட்டமன்ற ஆட்சிக்காலங்கள் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவுக்கு வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் மக்களிடம் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி அதிரடியான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா அஸ்ஸாம் சென்றுள்ளார்.
புதுச்சேரியில் (Puducherry) வி.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் இந்த வார தொடக்கத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக ராஜினாமா செய்ததையடுத்து, அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
ALSO READ: வெடிபொருட்களுடன் பிடிபட்ட சென்னை பெண்: ஓடும் ரயிலில் சிக்கிய ஜெலடின் குச்சிகள்
294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தேர்தல் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. COVID-19 தொற்றுநோய் காரணமாக, தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் ஏழு அல்லது எட்டு கட்டங்களில் சட்டமன்றத் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளது. 2016 ஆம் ஆண்டில், ஏப்ரல் 4 முதல் மே 5 வரை ஆறு கட்டங்களாக தேர்தல்கள் அங்கு நடத்தப்பட்டன.
மேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையும் 78,903 லிருந்து 1,01,790 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்தல் (Election) ஆணையத்தின் குழு ஒன்று ஜனவரி மூன்றாம் வாரத்தில் இரண்டு நாட்கள் மேற்கு வங்கத்திற்கு விஜயம் செய்திருந்தது. துணைத் தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயினும் இரண்டு முறை மாநிலத்திற்குச் சென்று அங்குள்ள நிலைமையைப் பற்றி ஆராய்ந்தார்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மத்திய மற்றும் மாநில ஒழுங்குமுறை முகவர்கள், மூத்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் மாநிலத்தின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் உள்ளிட்ட மாநிலத்தின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய குழு சந்திப்புகளை நடத்தியது.
மேற்கு வங்கத்தின் தலைமை தேர்தல் அதிகாரியும் மாவட்ட நீதிபதிகளுடன் வீடியோ மாநாட்டை நடத்தினார். மேற்கு வங்க மாவட்டங்களில் வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்குச் சாவடிகளைத் தயார்படுத்துவதற்கான விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து வெளியேற்றும் நோக்கில், பாஜக மேற்கு வங்கத்தில் ஒரு விரிவான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஆதரவைப் பறைசாற்றும் 'லோகோ சோனார் பங்களா' பிரச்சாரத்தை பாஜக வியாழக்கிழமை துவக்கியது.
ALSO READ: ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் - EPS
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR