அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஆணையர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Last Updated : Apr 3, 2019, 04:00 PM IST
அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை! title=

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஆணையர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற 15 நாட்களே மீதம் உள்ள நிலையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில், 32 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, அசோக் லவசா ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் விநியோகம் செய்வதை தடுப்பது, தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினரால் அதிக அளவில் பணம் கைப்பற்றப்பட்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

அதேவேலையில் தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்கள், கூடுதல் துணை ராணுவம் தேவைப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறியப்படுகிறது.

அரசியல் கட்சியினர் தெரிவித்த புகார் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இன்று மாலை 7 மணி வரை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறலாம் என தெரிகிறது.

Trending News