ECYC 3: ‘சென்னை மீதான அன்புக்காக’ என்ற கருப்பொருளுடன் கலக்கும் ‘என் சென்னை யங் சென்னை’

En Chennai Young Chennai: என் சென்னை யங் சென்னை (ECYC), சென்னையின் உயிர் நாடியாக கருதப்படும் மனித உணர்வைக் கொண்டாட அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 19, 2024, 12:49 PM IST
  • என் சென்னை யங் சென்னை: மூன்றாவது பதிப்பு.
  • சாதனையாளர்களுக்கு அங்கீகாரம்.
  • பிளாஸ்டிக் ஒழிப்புக்காக மூத்த குடிமக்களின் நடைபயணம்.
ECYC 3: ‘சென்னை மீதான அன்புக்காக’ என்ற கருப்பொருளுடன் கலக்கும் ‘என் சென்னை யங் சென்னை’ title=

En Chennai Young Chennai: என் சென்னை யங் சென்னை – பதிப்பு 3 (ECYC 3), அதன் மூன்றாவது பதிப்பை அறிமுகப்படுத்துகிறது. இந்த பதிப்பில் ‘இண்டர்ஜெனரேஷனல் இகோ-ட்ரைவ்’ அதாவது தலைமுறைகளுக்கு இடையேயான சுற்றுச்சூழல் இயக்கத்தில் கவனம் செலுத்தப்படுகின்றது. 

என் சென்னை யங் சென்னை (ECYC), சென்னையின் உயிர் நாடியாக கருதப்படும் மனித உணர்வைக் கொண்டாட அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும். இதன் மூன்றாவது பதிப்பு, நிலையான எதிர்காலத்தை பெற, தலைமுறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பில் தனித்துவமான கவனம் செலுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஜூலை 15, 2024 அன்று, மக்களவை உறுப்பினர் திரு. சசிகாந்த் செந்தில், "சென்னை மீதான அன்புக்காக" என்ற கருத்தாக்கத்தைக் கொண்ட இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழலையும் மேம்படுத்தி, அதனுடன் நகரின் துடிபான செயல்பாட்டிற்கு சென்னையின் அனைத்து வயதினரும் எவ்வாறு பங்களிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

முக்கிய சிறப்பம்சங்கள்:

இன்டர் ப்ரீ மற்றும் ப்ளே ஸ்கூல் போட்டிகள் (Inter Pre and Play School Championship): இதில் சிறு குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, தங்கள் தாத்தா பாட்டியிடமிருந்து நிலைத்தன்மை பற்றிய மதிப்புமிக்க பாடங்களையும் கற்றுக்கொள்வார்கள்.

பிளாஸ்டிக் ஒழிப்புக்காக மூத்த குடிமக்களின் நடைபயணம் (Senior Citizens Walk for Plastic): சென்னையில் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் செயல்முறையில் மூத்த குடிமக்கள் தீவிரமாக பங்கேற்கும் வாக்கதான். 

சாதனையாளர்களுக்கு அங்கீகாரம் (Recognition of Achievers): இளம் திறமைகளை அவர்களது சாதனைகளுக்காக கௌரவிப்பதோடு, நகரத்தில் நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் அனைத்து வயதினரையும்  ECYC அங்கீகரிக்கும்.

ECYC சென்னை மற்றும் அதன் மக்களின் முன்னேற்றத்திற்கு பங்களித்த தன்னலமற்ற நபர்களை அங்கீகரித்து அவர்ளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளையும் வழங்குகிறது. இந்த வகையில் ECYC பாரம்பரிய கொண்டாட்டங்களில் இருந்து வேறுபடுட்டு தனித்து ஒளிர்கிறது. "சென்னை மீதான அன்புக்காக" என்ற கருப்பொருளுடன் இணங்கி, தலைமுறைகளுக்கு இடையேயான கற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த ஆண்டின் பதிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ECYC என்பது வெறும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல. இது சமூகத்தை வளர்ப்பதற்கும், மாற்றத்தை தூண்டுவதற்கும், சென்னைக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் உந்துதலாய் திகழும் ஒரு இயக்கம். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News