'ஜெய் பீம்' படத்திற்காக வாங்கிய சம்பளத்தை திருப்பி அனுப்பிய எழுத்தாளர்!

ஆரம்பத்தில் 'ஜெய் பீம்' படத்திற்கு ஆதரவு பெருகினாலும், கடந்த சில தினங்களாக இப்படத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்புகள் கிளம்பி நாளுக்கு நாள் படம் சர்ச்சையில் சிக்கி வருகிறது.  இந்நிலையில் இப்படத்திற்கு கதை எழுத உதவிய பிரபல எழுத்தாளர் கண்மணி குணசேகரன் காட்டமாக தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 20, 2021, 10:12 PM IST
'ஜெய் பீம்' படத்திற்காக வாங்கிய சம்பளத்தை திருப்பி அனுப்பிய எழுத்தாளர்!

ஆரம்பத்தில் 'ஜெய் பீம்' படத்திற்கு ஆதரவு பெருகினாலும், கடந்த சில தினங்களாக இப்படத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்புகள் கிளம்பி நாளுக்கு நாள் படம் சர்ச்சையில் சிக்கி வருகிறது.  இந்நிலையில் இப்படத்திற்கு கதை எழுத உதவிய பிரபல எழுத்தாளர் கண்மணி குணசேகரன் காட்டமாக தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் நீண்ட உரையை பதிவிட்டுள்ளார்.  "படக்குழு ஆரம்பத்தில் படத்தின் தலைப்பை 'எலி வேட்டை' என்று தான் வைத்திருந்தது.  வட்டார மொழி வழக்கை பிரதியில் சேர்க்க படக்குழு என்னை நாடியது.   நான் விவசாயம், வேலை, எழுத்து என கிராமம் சூழ் வாழ்வியலில் வாழ்ந்து வந்ததால் எனக்கு திரைக்கதை எழுதுவது என்பது சம்மந்தமில்லாத ஒன்றாக இருந்தது.

ALSO READ வம்சி இயக்கும் விஜய் படத்தின் கதை இதுதான்! கசிந்த தகவல்!

இருப்பினும் படக்குழுவினர் இல்லம் தேடி வந்ததால் அந்த கோரிக்கையை மறுக்க இயலாமல் ஏற்றுக்கொண்டேன்.  அந்த கதையில் வரும் சில பெயர் சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததது, அதுபற்றி நான் கேட்டபோது அதனை மாற்றியமைத்து விடுவதாகவும் படக்குழு உறுதியளித்தது.  அதனையடுத்து இந்த படத்தின் உரையாடல் மாற்றம் தொடர்பான பணிக்கு படக்குழு எனக்கு சன்மானமாக ஐம்பதாயிரம் ருபாய் பணத்தை கொடுத்தது.  சில நாட்கள் கழித்து ஒரு நாளிதழை படித்தபோது தான் எனக்கு படத்தின் தலைப்பை 'எலி வேட்டை' என்பதை மாற்றி 'ஜெய் பீம்' என்று  படக்குழு வைத்திருப்பது தெரிய வந்தது.  

மேலும் படக்குழு என்னிடம் அந்த பிரதியை காமிக்கும்பொழுது அதில் சர்ச்சைக்குரிய இந்த அக்னி கலச முத்திரை குறித்த குறியீடு எதுவும் இடம்பெறவில்லை.  இந்து எனக்கு அப்போதே தெரிந்திருந்தால், இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்தியை குறிப்பிட்டதற்கு நான் நிச்சயம் எதிர்ப்பு தெரிவித்து அந்த குறியீட்டை நீக்க செய்திருப்பேன் .

அந்த காலண்டர் காட்சியில் மாற்றம் செய்திருந்தாலும் பல இடங்களில் ஒட்டுமொத்த வன்னிய சமூகத்தையே கொடூரர்களாக சித்தரித்தக் கொடூரத்தை என்னாலும். என்  மக்களாலும் தாங்கிக்கொள்ள இயலவில்லை.  மேலும் எங்கள் அண்ணன் அன்புமணி இதுகுறித்து கேட்டதற்கு உங்கள் நடிகர் சூர்யா உங்கள் வேலையை பாருங்கள் என்பது போல தெனாவட்டாக பதிலளித்துள்ளார்.  படைப்பாளியிடம் நேர்மை இருக்க வேண்டும்.  ஆனால் என்னிடம் படத்தின் தலைப்பு 'எலி வேட்டை' என்று காமித்துவிட்டு 'ஜெய் பீம்' என்று மாற்றிய போதே உங்களது நேர்மை எனக்கு தெரிந்துவிட்டது.  OTT தளத்தில் தானே வெளியாகிறது, யார் இதை கண்டுகொள்ள போகிறார்கள் என்று திமிராக ஒரு சமூகத்தை இழிவு செய்து சாதி வன்முறையை தூண்டிவிட்டீர்கள்.

 

செய்த தவறை ஒத்துக்கொள்ள மனிதனாக இருந்தால் போதும்' அந்த மனித தன்மை இல்லாமல், கலை, கலைஞன், மயிறு மட்டை என என்ன வேண்டிகிடக்கிறது.   கடந்த 25 ஆண்டுகாலமாக எனது கைவண்ணத்தில் தவழ்ந்த என்  நடுநாட்டு மொழியை என்னுடைய இனத்திற்கு எதிராக என்னாலேயே திருப்ப செய்துவிட்ட உங்கள் ஏமாற்றுத் துரோகத்தை நான் மன்னிக்க மாட்டேன்.   உங்களால் எனக்கும் என் இனத்திற்கும் சுமத்தப்பட்ட இழிவுகளை தாங்கிக்கொண்டு நீங்கள் கொடுத்த பணத்தை வைத்துக்கொண்டு என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அதனால், இயக்குனரான உங்களுக்கே நீங்கள் எனக்கு கொடுத்த இந்த பணத்தை திருப்பி அனுப்புகிறேன்" என்று கூறி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

ALSO READ மன்னிப்பு கேட்டால் சூர்யாவுக்கு 1 லட்சம் - தொடரும் ஜெய்பீம் சர்ச்சை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News