ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை அவமானப்படுத்தியதாக பாமகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். சூர்யாவை எட்டி மிதிபவருக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என்று பாமக மாவட்ட செயலாளர் கூறியிருந்தார். தற்போது திருச்சி, சென்னை, சேலம் பகுதியை சேர்ந்த பாமகவினர் காவல்துறை அலுவலகத்தில் சூர்யாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.
ALSO READ இது வேற லெவல் அப்டேட்! எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
திருச்சி
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் தலைமையில் பாமகவினர் அளித்த புகார் மனுவில், ‘‘சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த 1995-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை தயாரித்த நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது சாதி பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்ததற்காக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’’ என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் மாநில துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கூறுகையில் இந்த பிரச்சினைக்கு உடனடியாக நடிகர் சூர்யா தீர்வு காணாவிட்டால் இனி அவர் நடித்த படம் திருச்சி மாவட்டத்தில் திரையிட முடியாது எனவும் கூறினார்.
சென்னை
சென்னை அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் ஜெய் பீம் திரைப்படம் சர்ச்சை குறித்து காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காவல் இணை ஆணையர் இல்லாத காரணத்தினால் ஆவடியில் துணை ஆணையர் மகேஷ் ஐ.பி.எஸ் அவர்களிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே. என். சேகர் பேசினார், தமிழகத்தில் அமைதி நிலவவும் கலவரத்தை தடுக்கவும் நடிகர் சூர்யா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அப்படி கேட்கும் பட்சத்தில் என்னுடைய சார்பாக ஒரு லட்ச ரூபாய் மணியார்டர் சூர்யாவுக்கு அனுப்புகிறேன் என தெரிவித்தார்.
சேலம்
சேலம் சட்டப்பேரவை உறுப்பினர் இரா.அருள் சேலம் மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினருக்கு எழுதிய கடிதத்தில் ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து உள்ளதாகவும் அது இளைஞர்களிடத்தில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் எனவே வரும் காலங்களில் சூர்யா மற்றும் அவரை சார்ந்தவர்களது திரைப்படங்களை சேலம் மாவட்ட திரையரங்குகளில் தயவு செய்து வெளியிட வேண்டாம் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ALSO READ அனைவரும் அளித்த நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றி -நடிகர் சூர்யா உருக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR