குழந்தைகளை காப்பாற்ற பாம்பிடம் சண்டை போட்டு கடி வாங்கி உயிரை விட்ட நாய் !

குழந்தைகளின் உயிரை காப்பாற்ற பாம்புடன் போராடி நாய் உயிர்விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 8, 2022, 03:50 PM IST
  • வீட்டிற்குள் நுழைந்த நல்லபாம்பு
  • பாசத்திற்காக நடந்த போராட்டம்
  • உயிர் தப்பிய குழந்தைகள்
குழந்தைகளை காப்பாற்ற பாம்பிடம் சண்டை போட்டு கடி வாங்கி உயிரை விட்ட நாய் ! title=

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே கீழப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் செவலை உள்பட 4 நாய்களை வளர்ந்து வந்தார்.  இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் முன்பு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நல்லபாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைந்துள்ளது. அதை கண்ட செவலை நாய் பாம்பை விரட்ட குரைத்துள்ளது. ஆனால் அதற்கு பாம்பு அஞ்சாமல் முன்னோக்கி அடியெடுத்து வைத்தது.

பாம்பிடம் சண்டை, கடி வாங்கி உயிரை விட்ட நாய், உயிரை விட்ட நாய்,பாம்புடன் போராடிய நாய்,சிவகங்கை,ஒக்கூர் ,கீழப்பூங்குடி,நாய்,செவலை,உயிர் தப்பிய குழந்தைகள்,போராட்டம் ,நல்லபாம்பு

அதைப் பார்த்த நாய், பாம்பை பாய்ந்து பிடித்து கடித்துள்ளது. இந்த மோதலில் பாம்பு கடித்ததில் நாய் மயங்கி விழுந்து பேச்சு மூச்சில்லாமல் போனது. அதை கண்ட குழந்தைகள் கத்தி கூச்சலிடவே வீட்டிற்குள் இருந்த பெரியவர்கள் வெளியே வந்து பார்த்தனர். மயங்கி கிடந்த செவலை நாயை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் படிக்க | 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்து கொலை - தாயும் கள்ளக்காதலனும் கைது

அப்போது நாய் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். வீட்டில் புகுந்த பாம்பை தடுக்க முயன்று உயிர் தியாகம் செய்த செவலை நாயை கண்டு சரவணன் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் அவர்கள், நாய் செவலைக்கு இறுதி மரியாதை செலுத்தி வீட்டின் பின்புறமே புதைத்தனர். குழந்தைகளின் உயிரை காப்பாற்ற பாம்புடன் போராடி நாய் உயிர்விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | ராமநாதபுரம் : துப்பாக்கியை காட்டி கலவரத்தை அடக்கிய போலீசாரின் சாமர்த்தியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News