Video Mdu மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து: பக்தர்களுக்கு அனுமதி!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட கிழக்கு கோபுர நுழைவு வாயில் தவிர பிற வாயில்கள் வழியே பக்தர்கள் அனுமதி. 

Last Updated : Feb 3, 2018, 09:28 AM IST
Video Mdu மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து: பக்தர்களுக்கு அனுமதி! title=

மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் புத்தக கடை, அலங்கார பொருட்கள் கடை, உட்பட பல கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், கிழக்கு கோபுரம் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள சில கடைகளில் இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து, கிழக்கு கோபுர பகுதியில் இருந்த சுமார் 35 கடை முதல் 40 கடைகள் தீயில் கருகியதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாவட்ட ஆட்சியர் இந்த தீவிபத்தில் உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை என்றும், தீ விபத்தினால் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதில் எந்த விதமான பாதிப்பு இருக்காது, வழக்கமான முறையில் தரிசனம் செய்ய மக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, இன்று காலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் துவங்கப்பட்டது. பக்தர்களின் வழிபாட்டிற்கு எந்த தடங்களும் ஏற்படாமல் இறைவழிபாடு நடத்தி வருகின்றனர். 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட கிழக்கு கோபுர நுழைவு வாயில் தவிர பிற வாயில்கள் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதையடுத்து, விபத்து ஏற்பட்ட கடைகளை அகற்றும் பணி நடைபெறு வருகிறது. பின்னர், பாதுகாப்பு பணிக்காக 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Trending News