கும்பகோணம் அருகே அதிமுக பிரசார வாகனத்தில் தீ

கும்பகோணம் அருகே அதிமுக வேட்பாளர் ஆசை மணியின் பிரசார வேனுடன் சென்ற மற்றொரு வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Last Updated : Apr 3, 2019, 11:53 AM IST
கும்பகோணம் அருகே அதிமுக பிரசார வாகனத்தில் தீ title=

கும்பகோணம் அருகே அதிமுக வேட்பாளர் ஆசை மணியின் பிரசார வேனுடன் சென்ற மற்றொரு வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

பொதுத்தேர்தலையொட்டி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் ஆசைமணி, திருப்பனந்தாள், பந்தநல்லூர், குறிச்சி மரத்துறை உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது திருப்பனந்தாள் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதிமுக வேட்பாளர் ஆசை மணி  வாகனத்திற்கு முன்னால் சென்ற அறிவிப்பு வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக வாகனத்தில் இருந்தவர்கள் வெளியே குதித்து தப்பி ஓடினர் ,பின்னர் அப்பகுதி மக்கள் வாகனத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். 

இதனால் அங்கு சிறிது நேரம் பரப்பு நிலவியது. ரேடியேட்டர் பழுது காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. 

Trending News