தென்தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு நிலை எச்சரிக்கை, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது!
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை வானிநிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் தென்தமிழக கடலோர பகுதியின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதேவேலையில் இலங்கள் கடற்பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இருக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
சென்னையை பொருத்தமட்டில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 32 மற்றும் 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது!