ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் தலைமைச் செயலர் சண்முகம்

தமிழக அரசின் ஆலோசகர் பதவியை முன்னாள் தலைமைச் செயலர் சண்முகம் ராஜினாமா செய்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 3, 2021, 03:25 PM IST
ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் தலைமைச் செயலர் சண்முகம் title=

 

தமிழக தலைமைச் செயலாளராகப் பதவி வகித்தவர் சண்முகம். இவர் தமிழகத்தின் 46வது தலைமைச் செயலாளராக 2019ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.

1985ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான அவர் தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்கும் முன்னர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலர், நிதித் துறை செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இருந்தவர். இவர் தலைமைச் செயலாளராக பதவி ஏற்றும் முன்னர் தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலர், நிதித் துறை செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இருந்தவர்.

ALSO READ | திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்

கடந்த ஆண்டு கரோனா முதல் அலை வேகமாகப் பரவியபோது தமிழக டாஸ்க் ஃபோர்ஸ் தலைவராக சண்முகம் (Shanmugam) ஒருங்கிணைத்து இயக்கினார். பின்னர் அவரது பணி ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. ஜனவரி 31 அன்று ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமைச் செயலராக ராஜீவ் ரஞ்சன் பதவி ஏற்றார். அதன் பின்னர் சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராகப் பதவியேற்றார்.

இந்நிலையில் தற்போது புதிய அரசு அமைந்ததால் சண்முகம் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News