புது டெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்பொழுது அவர், ஜூன் 21 முதல் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கும். மேலும் இதற்காக மாநில அரசு செலவிட வேண்டி இருக்காது. ஜூன் 21 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி (Free Covid Vaccines) போடப்படும். அனைத்து இந்தியர்களுக்கும் இந்திய அரசே இலவசமாக தடுப்பூசிகளை அளிக்கும் என்று அறிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு பல மாநில அரசுகள் வரவேற்றுள்ளது. இந்நிலையில், பிரதமரின் அறிவிப்பை தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் (Chief Minister M.K.Stalin) வரவேற்றுள்ளார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடி அரசாங்கத்தின் முந்தைய நிலைப்பாட்டை மாற்றியமைத்ததை நான் பாராட்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலின் கூறியது:
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75% மத்திய அரசு கொள்முதல் செய்து, அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன். மத்திய அரசாங்கத்தின் முந்தைய நிலைப்பாட்டை மாற்றியமைத்ததையும் நான் பாராட்டுகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி உடல்நலம் என்பது ஒரு மாநிலப் பொருள் என்று தனது கருத்துக்களில் பல முறை வலியுறுத்தியுள்ளதால், தடுப்பூசியின் பதிவு, சரிபார்ப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் முழுமையான கட்டுப்பாடு வழங்கப்படுவது பொருத்தமானது. இவ்வாறு ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
As Prime Minister @narendramodi stressed multiple times in his remarks that Health is a state subject, it would be appropriate for each state to be given complete control of registration, validation and administration procedures of the vaccination.
— M.K.Stalin (@mkstalin) June 7, 2021
ALSO READ | நாட்டு மக்களிடையே உரையாற்றினார் PM Modi: பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்!!
மேலும் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது உரையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 % தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் வாங்கி செலுத்தலாம். மீதமுள்ள 75 சதவிகித தடுப்பூசிகளை மத்திய அரசே வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கும். எந்த மாநிலத்துக்கு எவ்வளவு டோஸ்கள் கிடைக்கும் என்பதை சில வாரங்களுக்கு முன்னரே மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும். ஜூன் 21 முதல் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசிகளை அளிக்கத் துவங்கும்.
அதேபோல தனியார மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பம் உள்ளவர்கள் செலுத்திக்கொள்ளலாம். ஆனால், தனியார் மருத்துவமனைகள் சர்வீஸ் சார்ஜாக 150 ரூபாயை மட்டுமே வசூலிக்க முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் தீபாவளி பண்டிகை வரை ரேஷன் கடைகளில் கரீப் கல்யாண் யோஜனா (Garib Kalyan Yojana) திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு (Corona Lockdown) விதியில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதனால் கொரோனா தொற்று முடிவடைந்துவிட்டதாக எண்ணி மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. பொது மக்கள் தொடர்ந்து கொரோனாவுக்கான நெறிமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ALSO READ | PM Modi உரை: மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி, ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR