புயலுக்கு முன் புத்தகங்கள், உலர் ரேஷன் பொருட்கள் வழங்க பள்ளிகளுக்கு உத்தரவு

சில அத்தியாவசிய சந்தர்ப்பங்களில், பாடப்புத்தகங்கள் நேரடியாக வீட்டிலேயே வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2020, 09:43 AM IST
  • நிவர் சூறாவளி தாக்குவதற்கு முன் அரசு பள்ளி மாணவர்களின் பாடபுத்தகம் விநியோகம்.
  • உலர் ரேஷனும் இப்போதே பள்ளியில் அளிக்கப்படும்.
  • பெற்றோர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டது.
புயலுக்கு முன் புத்தகங்கள், உலர் ரேஷன் பொருட்கள் வழங்க பள்ளிகளுக்கு உத்தரவு title=

சென்னை: நிவர் சூறாவளியால் ஏற்படவிருக்கும் கனமழைக்கு முன்னர் அரசு நடத்தும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களின் விநியோகம் நிறைவடைவதை உறுதி செய்வதற்காக, இரண்டு நாட்களுக்குள் புத்தகங்களை பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோருக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கும்படி பள்ளி கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இரண்டாம் செமஸ்டர் நோட்டுப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளின் விநியோகம் ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கியது. இதற்காக குழந்தைகள் பெற்றோருடன் தங்கள் பள்ளிகளுக்கு வந்து அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.

வரவிருக்கும் நாட்களில் சூறாவளி மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து அரசு பள்ளி அதிகாரிகளும் புதன்கிழமை மாலைக்கு முன்பே விநியோகத்தை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக பள்ளி கல்வித் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்குள் இலவச பாடப்புத்தகங்களை தவறாமல் பெற்றுக்கொள்ள தங்கள் குழந்தைகளுடன் பள்ளிகளுக்கு வரும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் மழையால் விநியோகம் பாதிக்கப்படாது," என்று அவர் கூறினார்.

ALSO READ: நெருங்குகிறது நிவர்: தமிழகத்தில் red alert, பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது NDRF

சில அத்தியாவசிய சந்தர்ப்பங்களில், பாடப்புத்தகங்கள் நேரடியாக வீட்டிலேயே வழங்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (MGR) சத்துணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, கருப்புளுந்து, பச்சைப் பயறு போன்ற உலர் ரேஷன்களும் பாடப்புத்தகங்களுடன் வழங்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

மழைக்காலங்களில் பள்ளிகளின் கிடங்குகளில் உலர் ரேஷன் வைக்கப்பட்டால் அவை கெட்டுப்போவதால், அனைத்தையும் மழைக்கு முன்பு பள்ளியிலிருந்து மாணவர்களுக்கு விநியோகித்து விடுமாறும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

ALSO READ: அலையின் உயரம் 8 அடி முதல் 18 அடி வரை இருக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News