கஜா புயல் நிவாரண பணி...எந்தெந்த மாவட்டத்திற்கு விடுமுறை...!

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெறுவதால் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 27, 2018, 08:37 AM IST
கஜா புயல் நிவாரண பணி...எந்தெந்த மாவட்டத்திற்கு விடுமுறை...! title=

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெறுவதால் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.....

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி கடந்த 20-ஆம் தேதி செய்தார். 

இதையடுத்து, இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், திருவாரூர் கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளும் மண்ணார்குடி, நீடாமங்கலம் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அம்மாவட்டங்களில் ஓரளவுக்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், மழை சில இடங்களில் பெய்து வருவதால் நிவாரண பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

 

Trending News