கில்லாடி கும்பலை வளைத்து பிடித்த போலீசார்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னையில் 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்கத்தை கடத்திய கும்பல் பிடிப்பட்டது இலங்கை வாலிபர் உள்பட 9 பேர் கைது

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jul 2, 2024, 12:22 PM IST
  • இலங்கையிலிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய 1.6 கிலோ தங்கம் கடத்தல்.
  • கடத்திய நபரை பிடித்த காவல்துறை.
  • வெளிவந்த அதிரடி தகவல்கள்.
கில்லாடி கும்பலை வளைத்து பிடித்த போலீசார்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு title=

சென்னை  அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தும் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும்  விமான நிலைய வருகை பகுதியில் இருந்து புறப்பாடு பகுதிக்கு செல்லும் டிரான்சிட் பகுதியில் உள்ள பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை மையமாக வைத்து தங்க கடத்தல் நடப்பதாகவும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்த நிலையில் துபாயில் இருந்து ரூ. ஒரு கோடி மதிப்புடைய 1.6 கிலோ தங்கத்தின் 3 உருளைகளை இலங்கை வாலிபர் கடத்தி கொண்டு வந்து சென்னை விமான நிலைய கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு வெளியில் வந்த போது சுங்கத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். 

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் கொண்ட தனிப்படை தீவிர விசாரணை நடத்தினார். அப்போது சில திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன. சென்னையைச் சேர்ந்த யூடிப்பர் சபீர் அலி என்பவர் கடந்த சில மாதங்களாக பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதியுடன் தொடங்கி நடத்தி வருகிறார். அந்த கடையில் 7 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான சிறப்பு அனுமதியுடன் பாசும் வாங்கி இருந்தார்.

மேலும் படிக்க | அன்புக் குடில்... தேவை உள்ளவர்கள் உணவு, புத்தகம், ஆடைகளை இலவசமாக பெறலாம்..!!

அதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து ட்ரான்சிட் பயணிகள் கடத்திக் கொண்டு வரும் தங்கக் கட்டிகளை விமான நிலையம் பாதுகாப்பு பகுதியில் உள்ள கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சபீர் அலிக்கு தெரிவித்து விடுவார்கள். சபீர் அலி தனது கடையில் உள்ள ஊழியர்களை அனுப்பி தங்கத்தை உள்ளாடைகளுக்குள் மறுத்து வைத்துக் கொண்டு வெளியில் கொண்டு வந்து சுங்கச் சோதனையும் இல்லாமல் கடத்தல் கும்பலிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள். இவ்வாறாக கடந்த 2 மாதங்களாக கடத்தல்  தொழில் சென்னை விமான நிலையத்தில் கொடி கட்டி பறந்து நடந்துள்ளது. 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கத்தை கடத்தியதாக தெரியவந்தது. 

இதை அடுத்து சுங்கத்துறை  அதிகாரிகள் இலங்கை சேர்ந்த கடத்தல் பயணி, சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வரும் சபீர் அலி, அவர் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த கடத்தல் கும்பலில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடந்த 2 மாதங்களில் கடத்தல் கும்பல் ரூ. 167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | எதிர்கட்சியோடு சேர்ந்து பதவிகளை ராஜினாமா செய்த ஆளுகட்சி கவுன்சிலர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News