குரங்கணி தீவிபத்து: தமிழக ஆளுநரின் இரங்கள் செய்தி!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்னை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து சுமார் 39 பேர் சென்றனர்.

Last Updated : Mar 13, 2018, 11:40 AM IST
குரங்கணி தீவிபத்து: தமிழக ஆளுநரின் இரங்கள் செய்தி! title=

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்னை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து சுமார் 39 பேர் சென்றனர்.

கொழுக்குமலைப் பகுதியில் இருந்து அனைவரும் மீண்டும் அடிவாரத்துக்கு திரும்பியபோது, திடீரென காட்டுத் தீ ஏற்பட்டதில் அக்குழுவினரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் காட்டுத்தீயில் சிக்க நேர்ந்தது, இதையடுத்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இக்கோர விபத்தில் இதுவரை 11 பேர் உயிர்இழந்துள்ளதாகவும், மேலும் 10 கவலைகிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

காட்டினுள் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணி நடைப்பெற்றுவருகிறது. இப்பணியில் இராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து உத்வேகத்துடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இக்கோர விபத்தில் பலியானவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கள்களை தெரிவித்துக் கொள்வதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது... 

"தேனி மாவட்டத்தில் போடி அருகே உள்ள குரங்கணி மலைத்தொடரில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் மலையேரும் பயிற்சிக்குழுவில் உள்ள 10 பேர் அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து எனது உள்ளம் மிகுந்த வேதனையால் நிறைந்துள்ளது.

தீ விபத்தில் பலியானவர்களின் ஆத்மா சாந்தியடையவும் இவர்களை இழந்து தவிக்கும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்துக் கொள்கிறேன். இராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து உத்வேகத்துடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மருத்துவமனையில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் மலையேரும் வீரர்கள் அனைவரும் விரைவில் பூரண நலம் அடைய தமிழக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்வதில் நானும் தமிழக மக்களோடு இணைந்து பிரார்த்தனை செய்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

Trending News